2022 ஐபிஎலில் சிறப்பாக ஆடி ஆட்டநாயகன் விருது வென்ற பின்பும் அணியில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள்

0
580
Pat Cummins and Evin Lewis

ஐபிஎல் தொடர் என்பது குறுகிய ஃபார்மேட் என்பதால், இந்த ஐபிஎல் தொடரில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடும் அணிகள் திடீரென இறுதியில் மோசமாக விளையாடலாம். அணி மட்டுமின்றி அணியில் உள்ள ஒரு சில வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் தங்கள் அணிக்காக சிறப்பாக விளையாடிய வீரர்கள், தற்பொழுது பிளேயிங் லெவனிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள் தற்போது பெஞ்சில் அமர்ந்து இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்று தற்போது பார்ப்போம்.

- Advertisement -
எவின் லீவிஸ் – லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

(சென்னை அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்றவர்)

தொடரின் ஆரம்பத்தில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை அணி நிர்ணயித்த இமாலய இலக்கை கடைசி நேரத்தில் நின்று தனது அணிக்காக சிறப்பாக எட்டி கொடுத்தார். அந்தப் போட்டியில் தொடர் நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சில போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடாமல் போக,ஜேசன் ஹோல்டர் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய வீரர்களின் வருகையும் அரங்கேற, இவர் தற்பொழுது வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்.

- Advertisement -
பேட் கம்மின்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

(மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருது வென்றவர்)

மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி தோல்வி பெற்று விடும் என்ற நிலையில் இருந்தது. அப்பொழுது பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம் அடித்து கொல்கத்தா அணியை 2-3 ஓவர்களிலேயே வெற்றிபெற வைத்தார்.

இருந்தாலும் அதன் பின்னர் இவர் சரியாக விளையாடாமல் போக இவருக்கு பதிலாக தற்போது டிம் சவுதிக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் தற்போது இவர் பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்.

அனுஜ் ராவத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

(மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்றவர்)

இளம் வீரரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆரம்பத்தில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து மிக அற்புதமாக விளையாடி தன்னுடைய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

அதன் பின்னர் ஒரு சில போட்டிகளில் இவர் சுமாராக விளையாட இவருக்கு பதிலாக அந்த அணியில் இருந்த மற்ற இளம் வீரர்களான மஹிப்பால் லோம்ரார் மற்றும் ராஜத் பட்டிதர் ஆகியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இவர் தற்பொழுது பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்.

ஷிவம் டுபே – சென்னை சூப்பர் கிங்ஸ்

(பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்றவர்)

தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி சென்னை அணிக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்த இவர், பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 46 பந்துகளில் 95* ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த போட்டியில் இவரது ஆட்டம் காரணமாக சென்னை அணி வெற்றி பெற்றது.

அதன் பின்னர் ஒரு சில போட்டிகளில் இவர் சுமாராக விளையாட, அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப் படாமல் போனது. ஒரு சில போட்டிகளில் வாய்ப்பின்றி தவித்த இவருக்கு சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போட்டியில் இவர் சிறப்பாக விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

மார்கோ ஜென்சென் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

(பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை வென்றவர்)

பெங்களூரு அணிக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அந்த போட்டியில் ஃபேப் டு பிளேசிஸ் அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி ஆகியோர் விக்கெட்டை கைப்பற்றி கிட்டத்தட்ட பெங்களூரு அணியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

அந்தப் போட்டிக்கு பின்னர் இவருடைய பந்துவீச்சு மிக மிக சுமாராக இருந்த நிலையில் இவருக்கான வாய்ப்பு தற்போது வழங்கப்படவில்லை. இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அணியில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் இவரும் தற்பொழுது பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்.