விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியை வழிநடத்த தகுதியான 5 வீரர்கள்

0
254
Shreyas Iyer and KL Rahul

இந்திய அணி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. தொடர் தொடங்குவதற்கு முன்பு எளிதில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய அணி தற்போது அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு தடுமாறி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வரிசையாக இரண்டு போட்டிகளில் தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர் தொடங்குவதற்கு முன்பே இதுதான் என்னுடைய கேப்டனாக கடைசி தொடர் என்று கூறிவிட்டார். இந்திய t20 அணி மோசமான நிலையில் இருக்கும் பொழுது விராட் கோலி விலகுவது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. தற்போது விராத் கோலிக்கு பிறகு இந்த இந்திய அணியை வழி நடத்தக்கூடிய 5 வீரர்கள் குறித்து காண்போம்.

ரோகித் சர்மா

மூன்று பார்மட்களிலும் இந்திய அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்குபவர் ரோஹித். ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு கேப்டனாக பங்காற்றி வரும் இவர் இதுவரை 5 முறை மும்பை அணிக்காக ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளார். மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த நிதாஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார் ரோகித். ராக்கோழி விலகியுள்ள நிலையில் தற்போது அடுத்த சீனியர் வீரர் ரோஹித் கேப்டனாக கூடும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் அய்யர்

இந்திய ஒருநாள் அணியின் நம்பர் 4 வீரராக விளையாடி வருபவர் ஸ்ரேயாஸ். காயம் காரணமாக இந்த முறை உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 2019 மற்றும் 2020 என இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்தார். இந்த இரண்டு தொடர்களிலும் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. உலகின் சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் இவரை பலமுறை பாராட்டியுள்ளார். இவர் எடுக்கும் முடிவுகள் பலவும் ஆட்டத்தை மாற்றும் அளவுக்கு சிறப்பாக இருக்கும் என்று பாண்டிங் கூறியுள்ளார்.

கே எல் ராகுல்

இந்த உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுடன் இந்திய அணிக்கு துவக்க வீரராக களம் கண்டு வருபவர் கே எல் ராகுல். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருப்பவர் இவர். பாதியில் அணியை கை விட்டு செல்லாமல் கடைசி வரை நின்று அணிக்கு சிறந்த ஸ்கோரை பெற்றுத் தருவதுதான் இவரது வழக்கம். இவரது தலைமையிலான கடந்த 2020 ஆம் ஆண்டு பஞ்சாப் அணி தகுதி பெறவே முடியாது என்ற சூழலில் இருந்து கிட்டத்தட்ட அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் நிலைக்கு வந்தது. கேப்டன் வாய்ப்பு கொடுக்கப் பட்டால் இவரும் இந்திய அணி சீரான முறையில் வழி நடத்துவார்.

சுப்மன் கில்

கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக விளையாடி வருபவர் சுப்மன் கில். தற்போது டீ20 அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வரும் காலங்களில் இவருக்கு அதிகமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. காரணம் இவரது அருமையான இன்னிங்சை கட்டமைக்கும் திறமை தான். மேலும் தோனி இருக்கும்போதே விராட் கோலி கேப்டனாகி தோனியிடம் இருந்து கேப்டன்சி உத்திகளைக் கற்றுக் கொண்டது போல கொல்லும் கோலியிடமிருந்து கேப்டன்சி திறமையைக் கற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷப் பண்ட்

சுப்மன் கில்லுடன் இணைந்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் கலக்கிய மற்றுமொரு இந்திய வீரர் ரிஷப் பண்ட். இந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் காயம் காரணமாக விலகிய போது டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டி வரைக்கும் கொண்டு வந்தவர் பண்ட். மேலும் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறந்த விக்கெட் கீப்பராக விளங்கி வருகிறார். ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே யாருக்கும் அஞ்சாமல் தனது அதிரடி பேட்டி மூலமாக சதம் கடந்தார். இதே சிறப்பான பாம்பு வருங்காலத்திலும் தொடரும் பட்சத்தில் இந்திய அணியின் டி20 கேப்டனாக சீக்கிரம் ரிஷப் பண்ட்டை காணலாம்.