வேறு நாடுகளுக்கு சென்று ஆசிய கோப்பையில் விளையாட முடியாமல் போன 5 வீரர்கள்!

0
116
Asiacup2022

15வது ஆசிய கோப்பை தொடர் வருகின்ற ஆகஸ்ட் 27 ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்குகிறது. இதுவரை நடந்த 14 ஆசியக் கோப்பை தொடர்களில் இந்திய அணி அதிகபட்சமாக 7 முறையும், இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்று இருக்கின்றன.

ஆசிய கிரிகெட் கவுன்சிலால் வருமானத்திற்காக இந்தத் தொடர் கொண்டுவரப்பட்டது. முதன்முதலாக 1984ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. நடுவில் கோவிட் தொற்றால் நிறுத்தப்பட்டு, இப்பொழுது நடத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு நடந்த கடைசி ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.

- Advertisement -

தற்பொழுது இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை ஆப்கானிஸ்தான் ஹாங்காங் என ஆறு அணிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இதில் ஹாங்காங் அணி தகுதி சுற்றின் மூலம் நேற்று ஆசிய கோப்பைக்குள் நுழைந்தது. இந்த அணி இந்தியா-பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள குழுவில் விளையாடுகிறது.

இந்த வீடியோ தொகுப்பில் பிற நாடுகளுக்கு விளையாட சென்றதால் ஆசிய கோப்பையில் விளையாட முடியாமல் போன 5 வீரர்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

டிம் டேவிட் :

- Advertisement -

ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த இவர், சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்காக 14 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது இவர் உலகம் முழுவதும் நடந்து வரும் டி20 தொடர்களில் மிகவும் பிரபலமான வீரராக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காகவும், தற்போது மும்பை அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவரின் தந்தை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டதால் இவரும் தற்போது ஆஸ்திரேலிய அணியில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் இவரை ஆசியக் கோப்பை போட்டியில் நம்மால் பார்க்க முடியாது.

மார்க் சப்மேன்:

நியூசிலாந்து – ஹாங்காங் பெற்றோர்களுக்கு பிறந்த இவர் தற்போது நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் ஹாங்காங் அணிக்காக விளையாடியவர். மேலும் ஹாங்காங் அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் இவர்தான். சமீபத்தில் நியூஸிலாந்து அணிக்காக ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷேகான் ஜெயசூர்யா:

இலங்கையைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆன இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட்டில் இருந்து விலகிக்கொண்டார். அத்தோடு இவர் குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு பெயர்ந்தார். இப்பொழுது அமெரிக்க அணிக்காக விளையாடி வருகிறார்.

அன்ஷுமான் ராத்:

2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் ஹாங்காங் அணியை கேப்டனாக வழிநடத்தியவர் இவர். அப்போது இவர் ஹாங்காங்கை விட்டு இந்தியாவிற்கு குடியேறி இருக்கிறார். இவரது தற்போதைய முக்கிய நோக்கம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பதே ஆகும்.

இஷதுல்லாக் டவ்லாட்சய்:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக போட்டிகளில் பங்கெடுத்து வந்த இவர், தற்போது ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து இருக்கிறார். மேலும் ஜெர்மன் தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.