மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேற அதிக வாய்ப்பு – அவரை கைப்பற்ற காத்திருக்கும் 5 ஐ.பி.எல் அணிகள்

0
168
Hardik Pandya

ஹர்திக் பாண்டியா ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட தொடங்கி தன்னுடைய மிக சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையை காட்டினார். அவரது திறமைக்கு பரிசாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்திய அணியிலும் 2016-ம் ஆண்டு முதல் மிக சிறப்பாகவே விளையாடி வந்தார்.

இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனைத் தொடர்ந்து மிக சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு முதுகு பகுதியில் மிகப் பெரிய காயம் ஏற்பட்டது.அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்பொழுது வரை அவரால் பழையபடி பந்து வீச முடியவில்லை. நடந்து முடிந்து ஐபிஎல் தொடரில் கூட அவர் பேட்டிங் மட்டுமே செய்தார். அதை தொடர்ந்து தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலக கோப்பை டி20 தொடரிலும் பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.

- Advertisement -

அடுத்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை நிச்சயமாக தக்கவைத்துக் கொள்ளும். மூன்றாவது வீரராக ஹர்திக் பாண்டியாவை தக்கவைப்பதில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு உலக கோப்பை டி20 தொடரில் அவரது ஃபார்ம் குறித்துதான் அவரை தக்க வைக்கும் முடிவு எடுக்கப்படும்.

ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாயவை அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றால் அவரை வேறு எந்த அணிகள் கைப்பற்ற முயற்சிக்கும் என்று தற்போது பார்ப்போம்.

அகமதாபாத் அணி

ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியாவை கைப்பற்ற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் 3 வீரர்களை ( 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் ) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தது.

- Advertisement -

அகமதாபாத் அணி புதிதாக ஒரு அணியை உருவாகும் பட்சத்தில் நல்ல திறமை வாய்ந்த ஒரு ஆல்ரவுண்டர் வீரரை முதலில் கைப்பற்ற முயற்சிக்கும். ஹர்திக் பாண்டியா பெயர் ஏலத்தில் வந்தால் நிச்சயமாக ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக அகமதாபாத் அணி நிர்வாகம் அவரை கைப்பற்றும் என்று நாம் நம்பலாம். ஐபிஎல் தொடரில் நிறைய அனுபவம் வைத்திருக்கும் அவர், புதிதாக வர இருக்கும் அகமதாபாத் அணிக்கு பலமும் சேர்ப்பார். எனவே அவரை அகமதாபாத் அணி நிச்சயமாக கைப்பற்ற முயற்சிக்கும்.

லக்னோ அணி

மேல் கூறியிருந்தது போல் மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்பாக லக்னோ அணிக்கும் சிறந்த மூன்று வீரர்களை கைப்பற்றுவதில்லக்னோ அணிக்கும் சிறந்த மூன்று வீரர்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டும். அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் மத்தியில் மிகப்பெரிய தொகைக்கு ( 7090 கோடி ) ஏலம் போனது லக்னோ அணியே.

இதன் அடிப்படையில் முதல் மூன்று வீரர்களை தக்க வைக்கும் சலுகை லக்னோ அணி நிர்வாகத்திற்கு உள்ளது. எனவே அகமதாபாத் அணி முந்திக் கொள்வதற்கு முன்பாக லக்னோ அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாயவை வாங்க ஆர்வம் காட்டும் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கலாம்.

பஞ்சாப் கிங்ஸ்

14 வருட ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற அணிகள் மத்தியில் பஞ்சாப் அணியும் ஒன்று. 2014 ஆம் ஆண்டு அந்த அணியின் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை வெல்லும் வாய்ப்பை கொல்கத்தா அணியிடம் பறிகொடுத்தது. அதன் பின்னர் அந்த அணி இதுவரை ஒருமுறைகூட சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

எனவே அடுத்த ஆண்டு அந்த அணி நிர்வாகம் மிகச் சிறந்த வீரர்களை தனது அணியில் தேர்ந்தெடுக்கும். இந்திய வீரர்கள் மத்தியில் சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக பார்க்கப்படுவது ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். எனவே ஹர்திக் பஞ்சாப் அணி பாண்டியாயவை மெகா ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு வாங்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

டெல்லி கேப்பிடல்

மேற்குறிப்பிட்டது போல் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கைப்பற்றிடாத அணிகள் மத்தியில் டெல்லி அணியும் ஒன்று. கடந்த மூன்று வருடங்களில் அந்த அணி தொடர்ச்சியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும், அந்த அணியால் ஒரு ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. 2020 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை அந்த அணி முன்னேறி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மெகா ஏலத்தில் நல்ல அனுபவம் வாய்ந்த அதே சமயம் சாம்பியன் வீரர்களை கைப்பற்றுவதில் டெல்லி அணி ஆர்வம் காட்டும். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா 2015 2017 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை ருசி பார்த்து இருக்கிறார். எனவே அவரது வருகையை டெல்லி அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என்பதால், அவரை கைப்பற்ற டெல்லி அணியும் ஆர்வம் காட்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்த ஆண்டும் மிக சிறப்பாக விளையாடி விளையாடி சுற்றுக்கு தகுதி பெற்ற அந்த அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியிடம் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிக சிறப்பாக விளையாட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மிகப்பெரிய அளவில் சொதப்பினார்கள்.

எனவே அடுத்த ஆண்டு இந்த விஷயத்தில் அந்த அணி நிர்வாகம் கவனமாக இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வளைத்துப் போடுவதில் அந்த அணி ஆர்வம் காட்டும். ஹர்திக் பாண்டியா மிடில் ஆர்டர் மற்றும் ஃபினிஷிங் செய்வதில் திறமை பெற்றவர். எனவே அவரை மிகப்பெரிய தொகைக்கு வாங்க கொல்கத்தா அணியும் போட்டி போடும். IPL