ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய ஐந்து இந்திய வீரர்கள்

0
302
Virat Kohli and Ruthuraj Gaikwad Orange Cap

2008 ஆம் ஆண்டு முதல் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் வரை, ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு தொடரிலும் வெளிப்படுத்துவார்கள். இதில் வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு குறிப்பிட்ட சாதனைக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும்.

ஆரஞ்சு தொப்பியை வாங்கிய வீரர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் வெளிநாட்டு வீரர்களில் அதிக மிக அதிக அளவில் இருக்கும். டேவிட் வார்னர் அதிக பட்சமாக மூன்று முறையும் ( 2015,2017 & 2019 ), கிறிஸ் கெயில் இரண்டு முறையும் ( 2011,2012 ) ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் 5 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றிய அந்த 5 இந்திய வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் ( 2010 ) – 618 ரன்கள்

2010ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 15 போட்டிகளில் 618 ரன்கள் குவித்தார். அந்தத் தொடரில் அவரது பேட்டிங் ஆவெரேஜ் 47.53 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 132.61 ஆகும். அந்த ஆண்டு மும்பை அணி இறுதிப்போட்டி வரை முன்னேறிதற்கு சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கும் ஒரு வகையில் உதவியது. அந்த தொடரில் 5 அரை சதங்களை சச்சின் டெண்டுல்கர் குவித்தார்.

அதிரடியாக விளையாடினால் மட்டுமே அதிக ரன்கள் குவிக்க முடியும் என்கிற கணக்கு கிடையாது. டெக்னிக்கலாக விளையாடினாலே அதிக ரன்கள் குவிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக சச்சின் டெண்டுல்கர் விளங்கி வருகிறார். அது மட்டுமன்றி ஐபிஎல் வரலாற்றில் முதல் ஆரஞ்சு தொப்பியை கைபற்றிய இந்திய வீரரும் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபின் உத்தப்பா( 2014 ) – 660 ரன்கள்

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக ராபின் உத்தப்பா 2014ஆம் ஆண்டு ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அந்த ஆண்டு அவர் 16 போட்டிகளில் 5 சதங்களுடன் மொத்தமாக 660 ரன்கள் குவித்தார்.அந்த தொடரில் அவரது பேட்டிங் ஆவெரேஜ் 44 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 137.78 ஆகும். அந்தாண்டு கொல்கததா கோப்பையை கைப்பற்ற உத்தப்பாவின் பேட்டிங்கும் மிக பெரிய அளவில் கை கொடுத்தது.

- Advertisement -

அந்த ஆண்டு முதல் முறையாக ஆரஞ்சு தொப்பியை வெல்லும் வீரருக்கு ஐபிஎல் மெடல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய அணியில் மீண்டும் விளையாடும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பை உத்தப்பா சரியாக பயன்படுத்தாத காரணத்தினால், அவர் இந்திய அணியில் இருந்து பழையபடி வெளியேற்றப்பட்டார்.

விராட் கோலி ( 2016 ) – 973 ரன்கள்

பெங்களூர் அணிக்காக அந்த ஆண்டு 16 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 7 அரை சதங்கள் என மொத்தமாக 973 ரன்கள் குவித்தார்.அந்த ஆண்டு அவரது பேட்டிங் ஆவெரேஜ் 81.08 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 152.03 ஆகும்.இதுவரை எந்த ஒரு வீரரும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 800 ரன்களுக்கு மேல் குவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டு அவரது சிறப்பான பேட்டிங் காரணமாகவே பெங்களூர் அணி இறுதி போட்டி வரை முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.

அந்த ஆண்டு டி20 போட்டிகளில் மட்டுமல்லாமல் சர்வதேச போட்டிகளிலும் விராட் கோலி நம்ப முடியாத ஃபார்மில் இருந்தார். விராட் கோலி குவித்த இந்த 973 ரன்களை வேறு எந்த வீரராலும் அவ்வளுவு எளிதில் முறியடிக்க முடியாது. ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளதால் போட்டிகள் அதிகமாக விளையாடப்படும். எனவே இனி வரும் நாட்களில் ஏதேனும் ஒரு வீரர் இந்த சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளதென எதிர்பார்க்கலாம்.

கே எல் ராகுல்( 2020 ) – 670 ரன்கள்

பஞ்சாப் அணிக்கு கேப்டனாக மிக அற்புதமாக அனைத்து போட்டிகளிலும் கே எல் ராகுல் விளையாடினார்.கடந்த ஆண்டு 14 போட்டிகளில் 635 ரன்கள் குவித்தார்.அந்த ஆண்டு அவரது பேட்டிங் ஆவெரேஜ் 45.35 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 136.26 ஆகும்.பஞ்சாப் அணிக்காக 2018, 2019 ஆண்டை தொடர்ந்து கடந்த ஆண்டும் கே எல் ராகுல் மிக அற்புதமாக விளையாடி ஆரஞ்சு தொப்பியை தனக்குச் சொந்தமாக்கி கொண்டார்.

கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் மற்ற வீரர்கள் இறுதி வரை நின்று ஆடாத காரணத்தினால், இவர் அந்த பொறுப்பை தன் கையில் எடுத்து கொண்டு தனது அணிக்காக இறுதி வரை நிதானமாக நின்று விளையாடினார். அதன் காரணமாக இவர் கம்மியான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார் என்கிற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ருத்துராஜ்( 2021 ) – 635 ரன்கள்

இந்திய அணிக்கு விளையாடாதவராக இந்தாண்டு ஐபிஎல் தொடரை மிக அற்புதமாக சென்னை அணிக்கு தொடங்கினார். கொரோனோ காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட இடைப்பட்ட நேரத்தில், இலங்கைக்கு எதிராக சர்வதேச போட்டியில் இந்திய அணிக்கு களம் இறங்கி விளையாடினார். அதன் பின்னர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இரண்டாம் பாதியிலும் சென்னை அணிக்காக தன்னுடைய அபாரமான பேட்டிங் சேவையை தொடர்ந்து கொடுத்து கொண்டே வந்தார்.

இந்தாண்டு 16 போட்டிகளில் மொத்தமாக 635 ரன்கள் குவித்தார்.இந்தாண்டு இவருடைய பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 136.26 மற்றும் ஆவெரேஜ் 45.35 ஆகும். பவர் ப்ளே ஓவர்கள் மட்டுமன்றி மிடில் ஓவர்களிலும் மிக சிறப்பாக இந்தாண்டு ருத்துராஜ் தன்னுடைய தனி திறமையை காண்பித்தார்.இவரது பேட்டிங் காரணமாகவே சென்னை அணி இறுதி போட்டி வரை முன்னேறி இந்தாண்டு கோப்பையையும் கைப்பற்றியது.