இந்தியப் பெண்களை மணந்த 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்

0
789
Foreign Cricketers who married to Indian Women

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த வினிராமன் அவர்களுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கல்யாணத்தை சென்னையில் வைத்து முடித்துக்கொண்ட மேக்ஸ்மெல், உடனுக்குடனேயே ஐபிஎல்-ல் பெங்களூர் அணிக்காகப் பங்கேற்கவும் வருகிறார். மேக்ஸ்வெல் போலவே இந்தியப் பெண்களை மணந்த ஐந்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் யாரென்று பார்ப்போம்!

ஹசன் அலி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, சமீயா அர்ஷூ என்பவரை துபாயில் வைத்துப் பார்க்க காதல் பற்றிக்கொள்கிறது. பின்பு இருவீட்டார் ஒப்புதலோடு 2019-ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது.

ஷான் டெய்ட்

ஆஸ்திரேலியாவின் உலகின் வேகமான வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்தியப் பெண்ணான மசூம் சின்ஹா என்பவரை, 2010 ஐ.பி.எல் பார்ட்டி ஒன்றில் சந்திக்க, கண்டதும் காதல் பின்பு திருமணம். மசூம் சின்ஹா நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், மாடலாகவும் இருந்தவர்.

சோயப் மாலிக்

பாகிஸ்தான் அணியின் பிரபல ஆல்-ரவுண்டர். கடந்த வருட இறுதியில்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த வருடம் பாகிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில் சிறப்பாக ஆடியிருந்தார். இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனையான ஹைதராபாத்தின் சானியா மிர்சாவை மணந்துள்ளார் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆசியாவின் பிரபலமான விளையாட்டுத் துறையைச் சேர்ந்த தம்பதிகள்!

முத்தையா முரளிதரன்

இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர். உலகில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர். இவர் சென்னையைச் சேர்ந்த மதிமலர் என்பவரை மணந்திருக்கிறார்.

மைக் பிரேர்லி

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இவர். 1976-77 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது மனா சாராபாய் என்ற இந்தியப் பெண்ணின் மீது காதலில் விழுந்து திருமணம் முடித்து தற்போது இரு பிள்ளைகளோடு வாழ்ந்து வருகிறார்கள்.