பெங்களூர் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்

0
254
Avesh Khan and Abhinav Mukund

ஐபிஎல் தொடரில் பல விசித்திரமான சாதனைகளும் பல அற்புதமான சாதனைகளை படைத்த ஒரே அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகும். இருப்பினும் அந்த அணியால் ஒருமுறைகூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. ஜாம்பவான் வீரர்கள் கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன் போன்ற அதிரடி கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் அந்த அணியால் ஒருமுறைகூட இறுதிப் போட்டியில் வெல்ல முடியவில்லை.

மூன்று முறை இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுள்ளது. அந்த அணிக்கு பல்வேறு தலை சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஒரு பக்கம் விளையாடி இருந்தாலும், மறுபக்கம் ஒரு சில இளம் கிரிக்கெட் வீரர்களும் விளையாடி உள்ளனர். அப்படி  ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய ஒரு சில கிரிக்கெட் வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம் 

- Advertisement -

5. அபினவ் முகுந்த்

தமிழ்நாட்டுக்காக உள்ளூர் ஆட்டங்களில் அற்புதமாக விளையாடியவர் அபினவ் முகுந்த் ஆவார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஓபனிங் வீரராக களமிறங்கி அற்புதமாக விளையாடக் கூடியவர் நாளடைவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தன்னுடைய திறமையை காண்பித்தார்.

2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் சென்னை அணிக்காக இவர் தன்னுடைய ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். இரண்டு போட்டிகள் மட்டுமே விளையாடிய இவர் அவருடைய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட்டானார். மிக மோசமாக விளையாடிய காரணத்தால்  சென்னை அணி இவரை தன்னுடைய அணியில் இருந்து நீக்கியது.

அதன்பின்னர் 2013-ம் ஆண்டு ராயல் சென்னை பெங்களூர் அணிக்காக விளையாட தொடங்கினார். அந்த அணியிலும் இவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் 19 ரன்கள் மட்டும் தான் இவர் குவிக்க முடிந்தது. அதன் பின்னர் இன்று வரை எந்தவிதமான ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

4. அப்துர் ரசாக்

பங்களாதேசை சேர்ந்த மிகச்சிறந்த ஸ்பின் பவுலராக ரசாக் விளங்கினார். பங்களாதேஷ் அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடிய இந்த வீரரை 2008ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட வைத்தது. 2008ஆம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிய ஒரே பங்களாதேஷ் வீரரும் இவரே ஆவார்.

இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மிக சிறப்பான ஸ்பின் லைன் அப் இருந்த காரணத்தினால் அவருக்கு அவ்வளவாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை விட்டுக் கொடுத்தார். அந்தப் போட்டியில் இவர் ஒரு விக்கட்டை கூட கைப்பற்றவில்லை என்பது. அதேபோல இந்தப் போட்டிக்கு பிறகு அவர் எந்தவித ஐபிஎல் போட்டியில் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3. ஸ்ரீதரன் ஸ்ரீராம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த ஆல்ரவுண்டர் வீரராக ஸ்ரீதர் ஸ்ரீராம் அப்பொழுது விளங்கினார். இவரது ஆட்டத்தை கண்ட பிசிசிஐ இந்திய அணியில் இவருக்கு விளையாடும் வாய்ப்பை வழங்கியது. ஒரு சில சர்வதேச போட்டிகளில் விளையாடிய பின்னர் இவருக்கு 2010ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூலம் ஐபிஎல் போட்டி விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த தொடர் முழுவதும் இவருக்கு அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை ஒரே ஒரு போட்டியில் மட்டும் இவர் விளையாடினார். அந்த போட்டியில் 2 ஓவர்கள் பந்து வீசி 24 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதேபோல பேட்டிங்கில் 29 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இவரது பேட்டிங் காரணமாக பெங்களூர் அணி அந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. ஆவேஷ் ஸ்கான்

இவர் 2016 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடியவர். தற்போது வரை 2 ஐபிஎல் அணிகள் விளையாடி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு அடுத்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது.

அதன் பின்னர் அதற்கு அடுத்த வருடம் டெல்லி அணிக்காக விளையாடினார். 2017 ஆம் ஆண்டு முதன் முதலாக பெங்களூர் அணிக்காக விளையாடிய போது முதல் போட்டியில் இவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் டெல்லி அணிக்கு சென்று தற்போது அந்த அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

1. கரண் ஷர்மா

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்றாலே ஆரம்ப காலகட்டங்களில் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு அந்த வீரரை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளும் அப்படி ஆரம்ப காலகட்டங்களில் கரண் ஷர்மா மிக அற்புதமாக பந்து வீசுவார். இவரது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

அதன் காரணமாக இவரை 2009ஆம் ஆண்டு பெங்களூர் அணியை தங்கள் அணியில் தேர்ந்தெடுத்து விளையாட வைத்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இவர் பந்து வீசவில்லை என்பதே வேடிக்கையாக அமைந்தது. அந்த போட்டியில் இவர் பேட்டிங்கில் ஒரு ரன் குவித்தார். அதன்பின்னர் பெங்களூர் அணியில் இருந்து வெளியேறி 2013ஆம் ஆண்டு ஐதராபாத் அணியில் விளையாட தொடங்கினார். பின்னர் மும்பை மற்றும் சென்னை அணிக்காக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.