தான் வாங்கிய ஆட்டநாயகன் விருதை சக வீரருக்கு விட்டுக் கொடுத்த 5 கிரிக்கெட் வீரர்கள்

0
536
Gambhir giving his man of the match to Virat Kohli

கிரிக்கெட்டில் தன் அணிக்கான வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருது பெறுவது, ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் பெருவிருப்பத்துக்குரிய விசயமாகும். பெரும்பாலும் ஆட்டநாயகன் விருதுகள் வெல்கின்ற அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வீரர்களுக்கே வழங்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில் சிறப்பாகச் செயல்பட்டதிற்குத் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயக விருதை, தன் சக வீரரோடு பகிர்ந்துகொண்ட ஐந்து வீரர்களைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்!

பாபர் ஆசம்

2022ஆம் ஆண்டு தற்போது வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக 305 ரன்னை சேஸ் செய்து பாகிஸ்தான் அணி வென்றது. இந்த ஆட்டத்தில் சதமடித்த கேப்டன் பாபர் ஆஸமுக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை, இறுதியில் இக்கட்டான நிலையில் 23 பந்துகளில் 41 ரன்களை அடித்து அணியை வெற்றிபெற வைத்த குஷ்தில் ஷாவிற்கு பாபர் ஆஸம் வழங்கினார்.

- Advertisement -
கவுதம் காம்பீர்

2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் கம்பீர் 150 ரன்களை குவிக்க இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை, அதே ஆட்டத்தில் 114 பந்துகளில் 107 ரன்களோடு, தனது முதல் சதத்தை அடித்திருந்த, 21 வயதான இளம் விராட் கோலியோடு, அவரை ஊக்குவிப்பதற்காகப் பகிர்ந்துகொண்டார்.

குல்தீப் யாதவ்

2022ஆம் ஆண்டு தற்போது நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதிற்காகத் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை, அதே ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கியமான இரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த அக்சர் படேலோடு குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டார்.

ஸ்மிருதி மந்தனா

2022ஆம் ஆண்டு சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 123 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கியதிற்காக வழங்கப்பட்ட ஆட்டநாயகி விருதை, அதே ஆட்டத்தில் 109 ரன்களை குறைந்த பந்தில் விளாசிய ஹர்மன்பிரித் கவுரோடு பகிர்ந்து கொண்டார் ஸ்மிருதி மந்தனா!

- Advertisement -
ஆஷிஸ் நெஹ்ரா

2015 ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் பெங்களூர் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறிய ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 28 ரன்கள் தந்த 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஆஷிஸ் நெக்ரா, தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை, அதே ஆட்டத்தில் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்த மைக் ஹஸ்ஸியோடு பகிர்ந்து கொண்டார். அந்த ஆட்டத்தில் பெங்களூரு அடித்த 139 ரன்களை, சென்னை அணி இறுதி ஓவரின் இறுதி பந்தில்தான் அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது!