2011 ஐ.பி.எலில் பிசிசிஐ கொண்டுவந்த 5 புதிய மாற்றங்கள்

0
72
IPL 2011

இந்த முறை ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் விளையாடும் என்பதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 8 அணிகள் விளையாடி வந்த ஐபிஎல் தொடரில் இனிமேல் பத்து அணிகள் பங்கேற்கும். ஆனால் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் என்பது ஒன்றும் புதியது கிடையாது. இதற்கு முன்பே கடந்த 2011 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்றன. கொச்சி மற்றும் புனே அணிகள் இரண்டு புதிய அணிகளாக சேர்க்கப்பட்டது. அந்த ஆண்டு பிசிசிஐ அமைப்பு ஐபிஎல் தொடரில் கொண்டுவந்த 5 புதிய மாற்றங்கள் குறித்து இங்கு காண்போம்.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட 10 அணிகள்

தற்போது வரை 8 அணிகள் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால் ஒவ்வொரு தொடருக்கும் சுமார் 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதுவே 10 அணிகள் ஆக மாறினால் தொடருக்கு 94 ஆட்டங்கள் நடைபெற வேண்டியது இருக்கும். இது ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யத்தை பாதிக்கும் என்பதால் கடந்த 2011ஆம் ஆண்டு 10 அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடப்பட்டது.

- Advertisement -

ஒரு குழுவில் இருக்கும் அணி அடுத்த குழுவில் இருக்கும் அணியுடனும் விளையாடலாம்

இரண்டு குழுக்கள் என்றாலே அதே உலகக் கோப்பை போல அந்தந்த குழுவில் இருக்கும் அணிகளுடன் தான் ஒவ்வொரு அணியும் மோதும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் சென்னை மற்றும் மும்பை போன்ற அணிகள் வேறுவேறு குழுவில் சேர்க்கப்பட்டால் மோதுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். அதனால் ஒரு அணி தன் குழுவில் இருக்கும் அணியுடனும் விளையாடும் வகையிலும் அடுத்த குழுவில் இருக்கும் அணிகளுடன் விளையாடும் வகையிலும் புதிய திட்டம் ஒன்று அப்போது வகுக்கப்பட்டது.

புதிய திட்டம்

10 அணிகள் ஐந்து வரிசைகளாகவும் இரண்டு நெடு வரிசையாகவும் பிரிக்கப்பட்டன. இதில் ஒவ்வொரு அணியும் நெடு வரிசையில் இருக்கும் அணிகளுடன் இரண்டு ஆட்டங்களும் சாதாரண வரிசையில் இருக்கும் அணிகளுடன் ஒரு ஆட்டமும் என மொத்தம் 13 ஆட்டங்கள் விளையாடும். அதன் பின்னர் ஒவ்வொரு அணியும் ஒரு குறிப்பிட்ட அறிவுடன் மட்டும் மற்றுமொரு போட்டியில் விளையாடும். ஆக ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்கள் விளையாடும்.

பிளே ஆஃப் முறைகள்

10 அணிகள் மோதும் தொடரில் முதலிடம் பிடிக்கும் அணிக்கும் நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கும் ஒரே மாதிரியான அரையிறுதி ஆட்டம் நடத்துவது என்பது சற்று பிற்போக்கான விஷயமாகத் தான் தெரியும். இதை கருத்தில் கொண்டுதான் பிளே-ஆஃப் முறைகள் கொண்டு வரப்பட்டன. முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகளுக்கு முதல் குவாலிபயர் போட்டியில் தோற்றாலும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் இந்த முறை 2011 முதல் தான் கொண்டுவரப்பட்டது.

- Advertisement -

ஸ்குவாட் எண்ணிக்கையில் மாற்றம்

கடந்த 2010ஆம் ஆண்டுவரை ஒரு அணியில் அதிகபட்சம் 30 வீரர்கள் தான் இருக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு 30 என்பதிலிருந்து 33 என்று ஸ்குவாடில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த ஆண்டும் இந்த மாற்றத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.