4வது டி20யில் இளம் வீரருக்கு பதிலாக முக்கியமான ஆல்ரவுண்டர் உள்ளே வருகிறார்; விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் இதோ..!!

0
129

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது டி20 போட்டியில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி தொடரை கைப்பற்றிய பிறகு தற்போது டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டி ஃப்ளோரிடா மைதானத்தில் நடைபெறவிருக்கிறது

- Advertisement -

6ம் தேதி நடைபெறும் நான்காவது டி20 போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அணி வீரர்கள் முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியை வெற்றி பெற்றுவிட்டால் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விடலாம். மூன்றாவது போட்டியின் நடுவில் காயம் காரணமாக வெளியேறிய ரோகித் சர்மா தற்போது குணமடைந்து கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவதற்கு முழு தகுதியுடன் இருக்கிறார் என அணியின் மருத்துவ குழுவினர் வெளியிட்டு விட்டனர்.

இந்திய அணிக்கு இது முக்கியமான போட்டி என்பதால் அணியில் பெரிதளவு மாற்றம் இல்லை. வேகப்பந்து வீச்சில் மட்டும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த மூன்று போட்டியில் ஆவேஷ் கான் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. ஆகையால் அவரது இடத்தை நிரப்ப நான்காவது டி20 போட்டியில் ஹர்ஷல் பட்டேல் உள்ளே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை உள்ளே எடுத்தால் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசுவார். மேலும் கூடுதல் பேட்டிங் வாய்ப்பாகவும் இந்திய அணிக்கு அமையும். 

தீபக் ஹூடா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் சுழல் பந்துவீச்சில் பங்களிப்பை கொடுப்பர். ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய நால்வர் வேகப்பந்து வீச்சில் பங்களிப்பை கொடுப்பர் என்பதால் ஒரு முழுமை பெற்ற அணியாக இந்திய அணி இருக்கிறது. 

- Advertisement -

நான்காவது டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் உத்தேச பட்டியல்

ரோகித் சர்மா(கேப்டன்), சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(கீப்பர்), ஸ்ரேயாஷ் ஐயர், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஸ்வர் குமார், அர்ஷ்திப் சிங், ஹர்ஷல் பட்டேல்.

கூடுதல் தகவலாக, இன்றைய போட்டியில் ரோகித் சர்மா ஓய்விற்கு வெளியில் அமர்த்தபட்டால் ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்று விளையாடலாம். துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் இருக்கலாம் என்று மற்றொரு தகவல்களும் அணியிடம் இருந்து வருகின்றன.