விராட் கோலியின் தலைமையின் கீழ் தங்கள் கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கிய நான்கு நட்சத்திர வீரர்கள்

0
483
Rishabh Pant and Shreyas Iyer

இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்று புள்ளி விவரங்களின்படி பார்த்தால் அது விராட்கோலி தான். என்னதான் தோனி மூன்று முக்கிய உதவ குப்பைகளை இந்திய அணிக்கு வாங்கிக் கொடுத்திருந்தாலும் அதிக வெற்றி சராசரியை வைத்திருப்பவர் கோலி தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ஆடி வந்த விதத்தை மாற்றி அமைத்து புத்துயிர் பெறச் செய்தவர் கோலி. இந்தியா என்றாலே ஸ்பின்னர்கள் அதிகம் விளையாடும் அணி என்பதை மாற்றி வெற்றிகரமான வேகப்பந்து வீச்சு கூட்டணி அமைத்து கொடுத்த கேப்டன் கோலி தான். இத்தனை வெற்றி வாய்ந்த கேப்டன் கோலி அடுத்த மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் கேப்டன் பொறுப்பை துறப்பதாக கூறியுள்ளார். கேப்டனாக விளையாடப் போகும் கடைசி உலக கோப்பையில் விராட் கோலி வெற்றியுடன் தனது பதவியை துறப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்திய அணியின் கேப்டன் கோலியின் தலைமையில் தங்களது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்த நான்கு முக்கிய இந்திய வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.

ஸ்ரேயாஸ் ஐயர்

கடந்த 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதன்முதலாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்ரேயாஸ். ஐபிஎல் தொடரில் பல சிறப்பான மாற்றங்களுக்கு கிடைத்த வெகுமதியாக இதை ரசிகர்கள் பார்த்தனர். இதுவரை 29 ஆட்டங்களில் 594 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அடுத்த மாதம் இந்திய அணி விளையாட போகும் உலக கோப்பை ஸ்டில் ரிசர்வ்டு வீரராக உள்ளார் இவர்.

- Advertisement -

செத்தேஸ்வர் புஜாரா

இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்படும் புஜாரா ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி கேப்டனாக இருக்கும் பொழுது ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்த அளவிற்கு இவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது அதன் காரணமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஐந்து ஆட்டங்கள் தான் மொத்தமே ஆடினார் புஜாரா.

அம்பாதி ராயுடு

அதே ஜிம்பாப்வே தொடரில் தான் 2013ஆம் ஆண்டு அம்பாதி ராயுடு ஓம் விராட் கோலியின் தலைமையின் கீழ் அறிமுகமானார். முதல் போட்டியிலேயே 63 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். ஐம்பத்தி ஐந்து போட்டிகளில் 1694 ரன்கள் குவித்தாலும் இவரால் இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை. உலகக் கோப்பைக்கான அணியில் இவர் பெயர் இடம் பெறாத விரக்தியில் கலந்த 2019ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ரிஷப் பண்ட்

தற்போதைய கிரிக்கெட்டின் லிட்டில் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வரும் ரிஷப் பண்ட் அனைத்து ஃபார்மட்டுகளிலும் விராட் கோலியின் தலைமையின் கீழ்தான் அறிமுகமானார். தன் ஆடிய முதல் டி20 போட்டியில் 5 ரன்களும் டெஸ்ட் போட்டியில் 24 மற்றும் 1 என இரண்டு இன்னிங்ஸ்களிலும் எடுத்தார். அறிமுகமான முதல் ஒருநாள் போட்டியில் இவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஆகும் வாய்ப்பை பெருமளவிற்கு ரிஷப் பண்ட் உச்சத்திற்கு சென்று விட்டார்.

- Advertisement -