கடந்த ஆண்டு ஐபிஎல் அணியில் விளையாடி தற்போது வர்ணையாளராக மாறியுள்ள 4 நட்சத்திர வீரர்கள்

0
159
Suresh Raina and Piyush Chawla

ஐ.பி.எல் ஏலத்தில் தங்கள் அணி கண்டிப்பாய் சில வீரர்களை எடுப்பார்கள் என்று நம்பியிருந்து, பின்பு ஏலத்தின் போது அப்படி நடக்காது இரசிகர்கள் ஏமாந்து போவது வாடிக்கையானது. அதேபோல் ஸ்டீவன் ஸ்மித் போன்ற சூப்பர் ஸ்டார் பிளேயர்கள் ஏலத்தில் விலைபோகாமல் போவதும் நடக்கும்.

இதேபோல் கடந்த ஐ.பி.எல் சீசனில் விளையாடிய, இந்த வருட மெகா ஏலத்தில் அணிகளால் வாங்கப்படாமல், ஐ.பி.எல்-ன் தொலைக்காட்சி வர்ணனையாளர்களாக, புதுப் பரிணாமம் எடுத்துள்ள நான்கு வீரர்கள் யாரென்று பார்ப்போம்.

சுரேஷ் ரெய்னா

சென்னை அணியின் சின்ன தலை என்று இரசிகர்களால் கொண்டாடப்பட்ட வீரர். மொத்த ஐ.பி.எல்-ல் மூன்றாவது வரிசை வீரர் என்றால் உடனே இவர் பெயரைச் சொல்லலாம். கடந்த ஏலத்தில் சென்னை அணி இவரை வாங்குமென்று இரசிகர்கள் நம்பியிருக்க, ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்கவில்லை. சென்னை அணியில் மட்டுமே ஆடி இப்போது வர்னணையாளராக இருக்கிறார்.

ஹர்பஜன் சிங்

மும்பை , சென்னை அணிகளுக்காக விளையாடிய வீரர். கடந்த வருடம் கொல்கத்தா அணிக்காக ஆடியிருந்தார்.

பியூஸ் சாவ்லா

முதலில் பஞ்சாப் அணிக்காக ஆடியவர் பின்பு கொல்கத்தா அணிக்கும், சென்னைக்கும் ஆடினார். கடந்த சீசனில் மும்பை அணியில் இடம்பெற்று இருந்தார்.

தவால் குல்கர்னி

ராஜஸ்தான் அணியில் அறிமுகமானவர், கடந்த சீசன் மும்பை அணிக்காக ஒரு போட்டியில் ஆடியிருந்தார்.