அடுத்த ஆண்டு சென்னை அணி வெளியேற்ற வாய்ப்புள்ள 4 நட்சத்திர வீரர்கள்

0
566
Dwayne Bravo and Robin Uthappa

ஐ.பி.எல் தொடரில் ஒவ்வொரு அணி நிர்வாகமும், தங்களுக்கான சரியான அணி அமையும் வரை, மெகா ஏலத்திற்கு அடுத்த ஆண்டுகளில் சில வீரர்களை வெளியே விட்டு, சிறிய அளவில் நடத்தப்படும் ஏலத்தில் சில வீரர்களை வாங்குவது நடந்துகொண்டே இருக்கும். இந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் சிறிய அளவிலான ஏலத்தில், சரியான அணியை அமைக்க, தற்போதுள்ள வீரர்களில் சென்னை அணி எந்தெந்த வீரர்களை விடுவிக்க வாய்ப்புள்ளது என்பதையே இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்!

ஆடம் மில்னே

மணிக்கு 145 கிலோ மீட்டருக்கு மேல் வீசும் இந்த நியூசிலாந்து வலக்கை வேகப்பந்து வீச்சாளரை சென்னை அணி மெகா ஏலத்தில் 1.90 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால் இவர் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடி காயத்தால் தொடரை விட்டே வெளியேறி இருந்தார். தீபக் சாஹர் காயம் சரியாகி அணிக்குத் திரும்பும் பொழுது, இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட் சென்னை அணியில் பலமாகும் என்பதால், இவரை வெளியேவிட வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -
டிவைன் ப்ராவோ

சென்னை அணியின் அடையாள வீரர்களில் ஒருவரான இந்தக் கரீபியன் மிதவேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டரை 4.40 கோடிக்குச் சென்னை அணி வாங்கியது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் பெரிதாய் வராத பிராவோ, பந்துவீச்சில் பத்து ஆட்டங்களில் பதினாறு விக்கெட்டுகளை வீழ்ந்தி இருந்தார். கிட்டத்தட்ட இவருக்கு நாற்பது வயதாகின்ற காரணத்தாலும், சென்னை அணியில் இவரது வேலையைச் செய்ய டிவைன் ப்ரட்டோரியஸ் இருப்பதாலும் இவரைச் சென்னை அணி வெளியே விடலாம்!

ராபின் உத்தப்பா

இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இரண்டு கோடிக் கொடுத்து சென்னை அணி இவரை வாங்கியது. 12 போட்டிகளில் 11 இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இவர் 230 ரன்களை மட்டுமே அடித்தார். மேலும் வயது 37 ஆகின்ற காரணத்தால் சென்னை அணி இவரை வெளியே விடலாம். ஒருவேளை அம்பதி ராயுடு விளையாடாமல் ஓய்வு பெறுவதாய் இருந்தால், உத்தப்பாவை சென்னை அணி வெளியே விட வாய்ப்புகள் மிகக் மிகக்குறைவு!

கிறிஸ் ஜோர்டான்

இந்த இங்கிலாந்து வலக்கை மிதவேகப் பந்துவீச்சாளரை இரண்டு கோடிக் கொடுத்து இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சென்னை அணி வாங்கியது. இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நான்கு ஆட்டங்களில் விளையாடி இவர் கைப்பற்றியது இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே. மேலும் இவரது பந்துவீச்சு எகானமி ஓவருக்கு 10.92 என்று மிக மோசமாய் இருக்கிறது. இவரை அடுத்த ஆண்டு சென்னை அணி விடுவிக்கும் என்று உறுதியாகவே கூட கூறலாம்!

- Advertisement -