10 பந்துகளுக்கும் குறைவாக ஆடி ஆட்டநாயகன் விருதைச் தட்டி சென்ற 4 வீரர்கள்

0
296
Asif Ali and Dinesh Karthik

பேட்டிங் என்பது ஓர் கலை. மூன்று வித ஃபார்மட்டுக்கும் வெவ்வேறு முறையில் அணுக வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஒருவருடைய முழு திறனும் சோதிக்கப்படுகிறது. நிதானமாகவும் நுட்பமாகவும் ஆடி ரன் சேர்ப்பதில் தான் பேட்ஸ்மேனின் திறமை அடங்கியுள்ளது. ஒருநாள் போட்டிகளிலும் கிட்டத்தட்ட டி20யைப் போல் ஆகிவிட்டது. 20 ஓவர் போட்டி என்றாலே அனல் பறக்கும்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பிப்பனர். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் சேர்ப்பதில் தான் பேட்ஸ்மேன்களின் கவனம் இருக்கும். ஒரு சில ஆட்டங்களில், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைவும். அப்போது நாம் இதே போல் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்கக முடியாது. டி20யில் 10 பந்துகளுக்கும் குறைவாக ஆடி ஆட்டநாயகன் விருதைச் தட்டி சென்ற வீரர்கள் அரிது. அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தினேஷ் கார்த்திக்

இந்திய அணிக்காக களமிறங்கிய வெற்றிகரமான தமிழக வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். இந்த விக்கெட் கீப்பர் நடப்பு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2018ஆம் ஆண்டு இவர் செய்த சம்பவம் எத்தனை காலம் ஆனாலும் உயர்ந்து நிற்கும். நித்ஹாஸ் டிராபி இறுதிப் போட்டியின் கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட போது, தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து அசத்தினார். வெறும் 8 பந்தில் 29 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதோடு கோப்பையும் வென்றார்.

பிராட் ஹாட்ஜ்

2014ல் ஆஸ்திரேலியா – தென்னாபிரிக்கா இடையேயான 2வது டி20, மழை காரணமாக 7 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, டி காக் மற்றும் டு பிளசிலின் அதிரடியால் 80 ரன்கள் சேர்த்து. இமாலய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில், வார்னரைத் தவிர அடுத்து வந்த அனைவரும் வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசி ஓவரில் 2 சிக்கார்கள் பறக்க விட்டு ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பெறச் செய்தார் பிராட் ஹாட்ஜ். 8 பந்துகளில் 21 ரன்கள் அடித்த அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ராம்நரேஷ் சர்வான்

டி20 உலகக்கோப்பைத் தொடரில், இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் போட்டிகளில் பரபரப்புக்கு என்றுமே பஞ்சமிருக்காது. 2009ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையின் 22வது போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. மழை குறிக்கிட்டதால் 9 ஓவர்களில் 80 ரன்கள் அடிக்க வேண்டுமென்று, இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் ராம்நரேஷ் சர்வான், மூன்று பவுண்டரிகள் உட்பட 9 பந்தில் 19 முக்கிய ரன்கள் அடித்து ஆட்டத்தை வெஸ்ட் இண்டீஸ் பக்கம் இழுத்துச் சென்றார்.

ஆசிப் அலி

இப்பட்டியலில் இருக்கும் கடைசி வீரர் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஆசிப் அலி. 2021 டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் விளாசி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கனவையும் கலைத்தார். அதிரடி ஆட்டக்காரர் ஆசிப் அலி, வெறும் 7 பந்துகளில் 25 ரன்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அவரின் அபார ஆட்டத்திற்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.