2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் டிரேட் செய்ய வாய்ப்புள்ள 4 வீரர்கள்

0
1834
Karthik Tyagi and Sai Kishore

ஐபிஎல் மெகா ஏலம், 4 வருடங்களுக்குப் பின் இந்த ஆண்டு நடைபெற்றது. இதுவே கடைசி மெகா ஏலம் என பிசிசிஐ சுற்று வட்டாரங்களிடம் இருந்து செய்திகள் கசிந்தன. ஆனால் அதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்புகளும் வெளிவரவில்லை. 2 நாட்கள் நடைபெறும் மெகா ஏலத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேவையான வீரர்களை வாங்க அனைத்து அணி நிர்வாகிகளும் மோதிக்கொண்டனர். இருப்பினும் அனைவராலும் வலுவான அணியை உருவாக்க இயலவில்லை. முக்கியமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் இம்முறை சற்று சொதப்பியுள்ளன. இதைச் சரி செய்ய ‘ டிரேட் விண்டோ ‘ வழியைப் பயன்படுத்தலாம். அதாவது தங்களுக்கு தேவையான வீரர்களை வேறு அணியில் இருந்து நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். அதற்கு பதிலாக வேறு வீரரையோ அல்லது பணமாகவோ திருப்பிக் கொடுத்திட வேண்டும். 2023 ஐபிஎலில் டிரேட் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்களைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

கார்த்திக் தியாகி

நடப்பு அணி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
வாங்க வாய்ப்புள்ள அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் & கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஹைதராபாத் அணி எப்போதும் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களுக்காக அதிக பணம் செலவிக்க விரும்பும் ஓர் அணி. 2022 ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்குகின்றனர். இவர்கள் மூவரும் சிறப்பாக செயல்படுவதால் கார்த்திக் தியாகிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரைப் போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளரைத் வாங்கத் தான் பல அணிகள் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றன.

கே.எஸ்.பரத்

நடப்பு அணி : டெல்லி கேப்பிட்டல்ஸ்
வாங்க வாய்ப்புள்ள அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சென்ற ஆண்டு துபாயில் நடந்த 2ஆம் பாதி ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஜொலித்த வீரர்களில் பரத்தும் ஒருவர். இம்முறை அவர் டெல்லி அணியில் இணைந்துள்ள இவர் இன்னும் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் சில நாட்களில் இந்திய அணிக்காக சர்வதேச அளவில் கால் பாதிக்கப் போகும் வீரர் இவர். மிக முக்கியமாக இவரது கீப்பிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. பேட்டிங்கிலும் நன்றாக ஆடி ரன்கள் சேர்க்கக் கூடியவர். அடுத்த ஆண்டு இவரை வாங்க பல அணிகள் விருப்பம் தெரிவிக்கும் என்று கூறினால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

சாய் கிஷோர்

நடப்பு அணி : குஜராத் டைட்டன்ஸ்
வாங்க வாய்ப்புள்ள அணிகள் : சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்

தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்துள்ளார். ஆனால் 2/3 வருடங்களாக அவர் பெஞ்சிலேயே காத்துக்கொண்டு இருக்கிறார். 2020ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை வாங்கியது. ஆனால் ஒருமுறை கூட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு குஜராத் அணி இவரை பெரிய தொகைக்கு எடுத்துள்ளது. நடப்பு சீசனிலாவாது இவர் களமிரங்குவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் அவர் அதே இடத்தில் தன அமர்ந்து கொண்டுள்ளார். இவரைப் போன்ற இடதுகை ஸ்பின்னருக்கு மதிப்பு அதிகம். மும்பை அணியில் ஓர் நல்ல ஸ்பின்னர் இல்லாதது தான் குறை. அதை அவர்கள் சாய் கிஷோரை வைத்து நிறப்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயன்ட் யாதவ்

நடப்பு அணி : குஜராத் டைட்டன்ஸ்
வாங்க வாய்ப்புள்ள அணிகள் : மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ்

சாய் கிஷோரைப் போல இந்த திறமை வாய்ந்த ஸ்பின்னரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவர் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் பங்காற்றக் கூடியவர். இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிவெளிப்படுத்தியுள்ளார். இவரை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்க நிச்சய முயற்சிக்கும் என்று தோன்றுகிறது.