சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ்.தோனி தவிர விக்கெட் கீப்பிங் செய்த 4 வீரர்கள்

0
1269
MS Dhoni and Ambati Rayudu CSK Keeping

கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் விக்கெட் கீப்பிங் என்று வந்துவிட்டால் அதில் எம்எஸ் தோனியின் பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவர் விளையாடிய காலகட்டத்தில் அந்த அளவுக்கு மிக சிறப்பாக தனது பணியைச் செய்து முடித்திருக்கிறார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் 200க்கும் மேற்பட்ட போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்து 150க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.

எம்எஸ் தோனியின் பிட்னஸ் பற்றி எந்தவித அறிமுகமும் தேவையில்லை. இருப்பினும் ஒரு சில போட்டிகளில் ஒரு சிலர் சூழ்நிலை காரணமாக அவரால் விக்கெட் கீப்பிங் செய்யமுடியாமல் போனது. அவர் விக்கெட் கீப்பிங் செய்யாத வேலையில், இதுவரை மொத்தம் நான்கு வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்திருக்கின்றனர். அந்த 4 வீரர்கள் யார் என்று தற்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

பார்த்தீவ் பட்டேல் ( 9 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் )

பார்த்தீவ் பட்டேல் ஆரம்ப காலகட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 சீசன்கள் விளையாடியுள்ளார். சென்னை அணி நிர்வாகம் எப்பொழுதும் ஒரு பேக்கப் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனை தனது அணியில் வைத்திருக்கும். அதன்படி எம்எஸ் தோனி இல்லாத வேளையில் இதுவரை 9 முறை சென்னை அணிக்கு விக்கெட் கீப்பிங் பணியை பார்த்தீவ் செய்திருக்கிறார்.

9 முறை விக்கெட் கீப்பிங் செய்த பொழுது இரண்டு ஸ்டம்பிங் மற்றும் ஐந்து கேட்ச் என மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியை கடந்து மற்ற அணிகளில் விளையாடிய சமயத்தில் இவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்ததும் குறிப்பிடத்தக்கது.

விரித்திமான் சாஹா ( ஒரு போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிள்ளார் )

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் 2011 முதல் 2013 வரை சென்னை அணியில் விளையாடினார். இந்த மூன்று சீசன்களில் அவ்வளவாக இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஒரே ஒரு முறை இவருக்கு விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டிய பணி கிடைத்தது. அந்த சமயத்தில் எம்எஸ் தோனிக்கு பதிலாக இவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்தார்.

- Advertisement -

அந்தப் போட்டியில் ஒரு கேட்ச் பிடித்து ஒரு விக்கெட்டை சாமர்த்தியமாக கைப்பற்றினார். அதன் பிறகு பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

சாம் பில்லிங்ஸ் ( ஒரு போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் கைப்பற்றிள்ளார் )

இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் 2018 மற்றும் 2019ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு விளையாடினார். இந்த இரண்டு சீசன்களில் மொத்தமாக 11 போட்டிகளில் இவர் சென்னை அணிக்கு விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு சென்னை அணி கோப்பையை பெற்ற சமயத்தில், ஒரு சில போட்டிகளில் முக்கியமான நேரத்தில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சாஹாவை போலவே இவரும் ஒரே ஒரு போட்டியில் எமது மணிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்து ஒரு கேட்ச் பிடித்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

அம்பத்தி ராயுடு ( ஒரு போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் கைப்பற்றிள்ளார் )

ஆரம்பத்தில் மும்பை அணிக்கு விளையாடி பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்கு விளையாடிய வீரர் அம்பத்தி ராயுடு. 2019-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி ஒரு சில போட்டிகளில் விளையாடவில்லை. அந்த சமயத்தில் ஒரு முறை இவருக்கு விக்கெட் கீப்பிங் பணி கொடுக்கப்பட்டது. தனக்கு கிடைத்த அந்த ஒரு போட்டியில் ஒரு விக்கெட்டை இவர் கைப்பற்றினார்.

அம்பத்தி ராயுடு ஆரம்பத்தில் மும்பை அணிக்காக விளையாடிய போது நிறைய போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறார் . மும்பை அணியில் நிறைய போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்த அவர் சென்னை அணியில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விக்கெட் கீப்பிங் பணியை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.