டி20-ல் கோலி இடத்தில் ஆட வைத்து பல்பு வாங்கிய 4 வீரர்கள்!

0
2728
Viratkohli

இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் வெள்ளைப்பந்து வடிவத்தில் துவக்க இடமும், டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடமும் சச்சின் பேட்டிங் செய்த காரணத்தினால் மிகவும் பிரபலமான இடம்!

இதற்கு அடுத்து தற்பொழுது பேட்டிங் யூனிட்டில் நம்பர் மூன்றாவது இடம் விராட் கோலி பேட்டிங் செய்கின்ற காரணத்தால் மிக மிக பிரபலமான இடம் மற்றும் முக்கியத்துவமான இடம். இவர் இந்த இடத்தில் பேட்டிங் யூனிட் துவக்க வீரர்களையும், மிடில் வரிசை வீரர்களையும் இணைக்கும் சங்கிலியாக இருக்கிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணியில் இவரது மூன்றாவது இடத்தில் இவருக்கு ஓய்வு தரப்பட்டு தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்றவர்கள் விளையாட வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் இவர்கள் எல்லாம் நல்ல முறையில் விளையாடியவர்கள். அதே இந்த இடத்தில் விளையாடி ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிய நான்கு வீரர்களை இந்த சிறிய கட்டுரை தொகுப்பில் பார்க்கலாம்.

ராகுல் திரிபாதி :

ராகுல் திரிபாதி இதுவரை இந்திய டி20 அணியில் ஐந்து போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்று 97 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்த வருடம் ஐபிஎல் தொடர் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தற்பொழுது நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இவரை சேர்க்கவில்லை. இவரது சர்வதேச டி20 சராசரி 20 ரன்கள் ஆக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெறாத இவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தேவ்தத் படிக்கல் :

2021 ஆம் ஆண்டு ரவி சாஸ்திரி பயிற்சியில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்க, ராகுல் டிராவிட் பயிற்சியில் சிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அந்த சுற்றுப் பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இவருக்கு இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. அதற்கு மேல் இவர் இந்திய அணியின் பக்கமே காணப்படவில்லை.

ரோகித் சர்மா :

தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருக்கும் இவர், 2020 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் இந்திய அணி சந்தித்த டி20 உலக கோப்பையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் தன்னை தானே மூன்றாவது இடத்திற்கு இறக்கி கொண்டார். அந்த போட்டியில் இவர் எடுத்தது 14 பந்துகளுக்கு 14 ரன்கள். அதற்கு மேல் இவர் அந்த இடத்துப் பக்கமே வரவில்லை.

இஷான் கிஷான் :

டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்பது மிகச் சிறந்த யுத்தியாக பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் இடதுகை பேட்ஸ்மேன் ஆன இவருக்கு ஒரே ஒரு டி20 போட்டியில் வாய்ப்பு தரப்பட்டது. அந்த போட்டியில் மொத்தம் ஒன்பது பந்துகளை சந்தித்த இவரது ஸ்ட்ரைக்ரேட்
44.44. எனவே மீண்டும் இவரும் அந்த இடத்தில் காணப்படவில்லை!