இந்திய அணியின் அடுத்த துணை கேப்டனாக வாய்ப்புள்ள 4 வீரர்கள் !

0
251
Indian cricket team

ஒரு அணிக்கு கேப்டன் எவ்வளவு முக்கியமோ அதேயளவு துணை கேப்டனும் முக்கியம். கேப்டன் ஆடாத ஆட்டங்களில் மட்டும் அல்ல, பொதுவாகவே கள வியூகங்கள் மட்டும் வீரர்களுடனான தொடர்புகளுக்கு துணை கேப்டன் மிக முக்கியம்.

சவுரவ் கங்குலியின் கேப்டன்சியில் துணை கேப்டானான ராகுல் டிராவிட்தான் கேப்டனுக்கும் வீரர்களுக்குமான பாலமாய் இருந்தார். ஒரு கேப்டன் பொறுப்பிலிருந்து நகரும் போது, அந்த அணி சிறு தடுமாற்றத்திற்கு உள்ளாகும். இதைத் தவிர்க்க துணை கேப்டனை எதிர்கால கேப்டனாக ஆரம்பத்திலிருந்தே ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் உருவாக்கும். இதை இந்திய அளவில் விராட்கோலியை வைத்து சரியாகச் செய்தவர் மகேந்திர சிங் தோனி.

- Advertisement -

தற்போது இந்திய அணிக்கு ரோகித் சர்மா மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கிறார். ஆனால் இந்திய அணி எதிர்கால கேப்டன் இல்லாது அதாவது துணை கேப்டன் இல்லாதே இருக்கிறது. துணை கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் அடிக்கடி காயத்தில் சிக்கிக்கொள்கிறார். தற்போது இந்திய அணிக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் துணை கேப்டனாகவும் ரோகித் சர்மாவுக்குப் பிறகு கேப்டனாகவும் செயல்பட அனுபவமும், தகுதியும் இருக்கின்ற நான்கு வீரர்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்!

கே.எல்.ராகுல்:

கே.எல்.ராகுல் தற்போது இந்திய அணிக்கு துணை கேப்டனாகத்தான் இருந்தார். ஆனால் அவரது காயம் ஒரு கவலையான விசயமாக இருக்கிறது. மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடும் ராகுல் துணை கேப்டனாக மீண்டும் வரலாம். இவருக்கு ஐபிஎல் தொடரில் பஞ்சாப், லக்னோ அணிகளை வழிநடத்திய அனுபவம் இருக்கிறது. கம்பீரின் ஆலோசனையில் குஜராத் அணியில் இவரது கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது!

- Advertisement -

ரிஷாப் பண்ட்:

ஐபிஎல் தொடரில் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பை வகித்து வருவது மட்டும் அல்லாமல், அவர் விக்கெட் கீப்பராய் இருப்பதும், இளம் வயது வீரர் என்பதும் அவரை துணை கேப்டனாக்கி எதிர்கால கேப்டானாகவும் மாற்றலாம். ஒரு விக்கெட் கீப்பர் என்பவர் 50% கேப்டன் போலத்தான் களத்தில் செயல்படுவார்கள்!

ஹர்திக் பாண்ட்யா:

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐபிஎல் தொடரில் குஜராத் கேப்டன் பொறுப்பிற்கு வந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு கோப்பையையும் வென்றார். கேப்டன் பதவி அவரது பேட்டிங்கை மிகப் பக்குவமாக்கி இருப்பது ஆச்சரியமான விசயம். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக வர ஹர்திக் பாண்ட்யா தகுதியானவரே!

சூர்யகுமார் யாதவ்:

தற்போது இந்திய அணியில் வெள்ளைப்பந்த போட்டிகளில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக உருவாகி இருக்கிறார் சூர்யகுமார். இவரது தைரியமான ஆட்ட அணுகுமுறையும், உள்நாட்டு போட்டிகளில் அதிகம் விளையாடி ஏற்பட்டிருக்கும் அனுபமும், இவரை துணை கேப்டனாக கொண்டுவர தகுதி ஆக்குகிறது. பிரன்டன் மெக்கல்லம் போல் ஒரு அக்ரசிவ் கேப்டன்சியை இவரிடம் எதிர்பார்க்கலாம்!