ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் அணிக்குத் திரும்பியதும் கூடுதல் பலம் பெறவிருக்கும் 4 அணிகள்

0
4410
Anrich Nortje and Glenn Maxwell

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் ஏலத்தில் எடுக்கப்பட்ட முழுமையான வீரர்களோடும், முழுப் பலத்தோடும், மும்பை, ராஜஸ்தான், ஹைதராபாத், குஜராத் அணிகளைத் தவிர மற்ற அணிகள் யாரும் களமிறங்கவில்லை. சென்னை அணி தன் முக்கிய வீரரான தீபக் சாஹரை காயத்தால் முதல் ஏழு போட்டிகளுக்கு இழந்திருக்கிறது.

டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, லக்னோ அணிகள் தங்கள் அணியின் முதுகெலும்பாய் கருதி ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் இல்லாதுதான் களம் கண்டு வந்தன. இப்போது இந்த நான்கு அணிகளும் முழுப்பலத்தோடு களமிறங்கும் விதமாய் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் அணிகளோடு இணைந்து களமிறங்க இருக்கிறார்கள்!

- Advertisement -
டெல்லி

டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும், கேப்டன் ரிஷாப் பண்ட்டும் பெரிய நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் ஏனென்றால் உலகின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அணிக்கு வருகிறார். சிறந்த பீல்டிங் திறமையோடு, கேப்டன்சி அனுபவமும் இருக்கின்ற இவரது வருகை ரிஷாப்பிற்கு களத்தில் வெகு உதவியாய் இருக்கும். அடுத்து அதிரடி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஸூம் வருகிறார். ஆனால் இவர் காயம் பட்டிருக்கிறார் என்பது வருத்தமான செய்தி.

பெங்களூர்

நடுவரிசை அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல்லும், ஆரம்ப ஓவர்களில் விக்கெட் அடிக்கும் ஜோஸ் ஹேசில்வுட்டும், இவருக்கு மாற்று வீரரான ஜான் பெகரன்டப்பும் அணிக்குத் திரும்பி இருக்கிறார்கள். ரூதர்போர்டிற்குப் பதிலாய் மேக்ஸ்வெல்லும், டேவிட் வில்லிக்குப் பதிலாய் ஹேசில்வுட்டும் வருவது பெங்களூர் அணி இரசிகர்ளை நம்பிக்கையாய் “ஈ சாலா கப் நம்தே” போட வைக்கும்!

கொல்கத்தா

ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனும், கொல்கத்தா அணியின் துணை கேப்டனுமான பாட் கம்மின்ஸ் அணிக்குத் திரும்புகிறார். டிம் செளதியின் இடத்தில் இவர் உறுதியாய் விளையாடுவார். இனி கொல்கத்தாவின் இறுதிக்கட்ட ஓவர்கள் இன்னும் கூர்மையாகும். மேலும் பாட் கம்மின்ஸ் சிலபல சிக்ஸர்களையும் விளாசுவார் என்பது கூடுதல் பலம்!

- Advertisement -
லக்னோ

ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி தக்க வைத்த வெளிநாட்டு ஆட்டக்காரரான ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் வருவது லக்னோவின் பலத்தை மேலும் அதிகரிப்பதோடு, கூடுதல் பவுலிங் ஆப்சனையும் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு வழங்குகிறது. ஏற்கனவே அணியோடு இணைந்த வெஸ்ட்இன்டீஸ் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டரோடு இவரும் வந்து இணைவது லக்னோவிற்கு மிகப்பெரிய பலமே!