2022; இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய 4 இந்திய வீரர்கள்!

0
1440
ICT

பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என்பது ஒரு அபூர்வ கனவாகவே இருந்து வந்தது. அந்தத் தருணத்தை முதல் முதல் உண்மையாகியவர் சச்சின்!

இதற்கு முன்பு ஆரம்பத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி கிறிஸ்டன், சையத் அன்வர், கங்குலி, ஜெயசூர்யா ஆகியோர் இரட்டை சதத்தை நெருங்கி தவறவிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

2010 ஆம் ஆண்டு சச்சின் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார், அதற்குப் பின்பு வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, கிறிஸ் கெயில், மார்ட்டின் கப்தில், பக்கார் ஜமான் என நிறைய இரட்டை சதங்கள் வர ஆரம்பித்தது.

இந்த ஆண்டு மட்டும் இந்திய கிரிக்கெட்டில் நான்கு இரட்டை சதங்கள் ஒரு நாள் போட்டியில் வந்திருக்கிறது. ஒரு இரட்டை சதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும், மற்ற மூன்று இரட்டை சதங்கள் இந்திய உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடரான விஜய் ஹசாரே தொடரிலும் வந்திருக்கிறது. அந்த நான்கு வீரர்கள் யார்? அவர்கள் எந்த அணிக்கு எதிராக எவ்வளவு ரன்கள் அடித்தார்கள் என்று இந்தக் கட்டுரை தொகுப்பில் பார்ப்போம்!

இஷான் கிஷான்:

- Advertisement -

இந்த ஆண்டு இந்த மாதம் சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இவர் இரட்டை சதம் அடித்தார். 126 பந்துகளில் இவர் இந்த இரட்டை சதத்தை எட்ட, இது அதிவேக ஒருநாள் போட்டி இரட்டை சதமாக பதிவாகி இருக்கிறது. இந்த போட்டியில் இவர் 210 ரன்கள் விளாசினார்!

ருதுராஜ்:

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடரில் உத்திரபிரதேச அணிக்கு எதிராக 220 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்கள் விளாசி அபூர்வ சாதனையை நிகழ்த்தி இருந்தார். அத்தோடு அது ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகவும் பதிவாகியது!

நாராயணன் ஜெகதீஷ்:

தமிழக அணிக்காக விளையாடி வரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன இவர் சமீபத்தில் விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டி தொடரில் அருணாச்சல் பிரதேச அணிக்கு எதிராக 227 ரன்கள் குவித்தார்!

ஸ்மார்த் வியாஸ் ;

சௌராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் இவர் டெல்லியில் வைத்து மணிப்பூர் அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் விஜய் ஹசாரே தொடரில் 130 பந்துகளில் 200 ரன்கள் குவித்தார்!