டி-20 உலகக்கோப்பையில் உடையக் காத்திருக்கும் “4” டி-20 உலக சாதனைகள்!

0
3248
T20wc2022

ஆஸ்திரேலியாவில் இந்த மாதம் அக்டோபர் 22ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 13ஆம் தேதி முடிய இருக்கிறது எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர். இந்த உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கு பெறுகின்றன. பிரதான சுற்றில் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, சாம்பியன் அணி தேர்வு செய்யப்படும்!

தற்போது நடக்கவுள்ள இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நான்கு டி20 உலகச் சாதனைகள் முறியடிக்கப்பட இருக்கிறது. இந்தக் கட்டுரையில் நாம் அந்த சாதனைகளையும் அதை செய்தவர்களையும் யார் அதை முறியடிக்க போகிறார்கள் என்பதையும் பார்க்கப்போகிறோம்!

- Advertisement -

மகேந்திர சிங் தோனி மற்றும் இயான் மோர்கன்;

இவர்கள் இருவரும் கேப்டனாக 72 போட்டிகளில் இருந்திருக்கிறார்கள். இது தற்போது டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்களுக்கான உலகச் சாதனையாக இருந்து வருகிறது. தற்போது நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் இதை உறுதியாக முறியடிப்பார் என்று நம்பலாம். ஏனென்றால் அவர் 68 டி20 போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். லீக் சுற்றில் 5 ஆட்டங்களுக்கு அவர் தலைமை ஏற்றாலும் இந்தச் சாதனை உடைக்கப்படும்!

லசித் மலிங்கா ;

- Advertisement -

டி20 போட்டிகளில் அதிக முறை பேட்ஸ்மேன்களை போல்ட் செய்தவர் என்ற உலகச் சாதனை லசித் மலிங்காவிடம் இருக்கிறது. இவர் இந்த முறையில் 43 முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து இருக்கிறார். தற்போது இதே முறையில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் 39 முறை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இந்த சாதனையும் இந்த டி20 உலக கோப்பையில் உடைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி ;

விக்கெட் கீப்பராக டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டமிழக்கச் செய்தவராக 91 டிஸ்மிஸஸ் செய்து மகேந்திர சிங் தோனி இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் 79 டிஸ்மிஸஸ் செய்தவராக இருக்கிறார். எனவே இவருக்குத் தோனியின் உலகச் சாதனையை உடைக்க அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.

லமிச்சானே ;

இந்த நேபாள் நாட்டு சுழற்பந்துவீச்சாளர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற உலகச் சாதனையை கைவசம் வைத்திருக்கிறார். ஆனால் இவர் ஒரு பாலியல் புகாரில் சிக்கி இப்பொழுது விளையாட முடியாமல் இருக்கிறார். இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் மொத்தம் 32 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். எனவே இந்த சாதனையும் உடைய அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது!