3வது ODI.. இந்திய அணியில் மீண்டும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு.. ஆஸி பிளானுக்கு செக்!

0
22554
ICT

இந்தியாவில் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி கேஎல்.ராகுல் தலைமையில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி இதற்கு முன்பாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிராக விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அடுத்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்று, அந்த தொடரை இழந்தது.

- Advertisement -

மேலும் அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய நான்கு நட்சத்திர வீரர்கள் காயத்தால் இடம் பெறவில்லை. உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பயன்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்தது. மூன்று போட்டிகளையும் தேவைப்படும் எல்லா வீரர்களுக்கும் பிரித்து தர திட்டம் செய்திருந்தது.

இந்த நிலையில் இந்தத் தொடருக்கு இந்திய அணி நிர்வாகம் புத்திசாலித்தனமாக முதல் இரண்டு போட்டிகளுக்கு முக்கிய நான்கு வீரர்களுக்கு ஓய்வு கொடுத்திருந்தது. ரவிச்சந்திரன் அஸ்வினை பரிசோதிப்பதற்கான களமாகத் தொடரை பயன்படுத்தியது. தற்போது இதில் வெற்றியும் கண்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் ஒரு அதிரடியாக குடும்ப விவகாரம் என்கின்ற காரணத்தின் அடிப்படையில் ஜஸ்ப்ரித் பும்ரா தொடரை விட்டு வெளியேறி வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை இனி உலகக் கோப்பையில்தான் ஆஸ்திரேலியா சந்திக்கும்.

மேலும் முகமது சிராஜை இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி காட்டவில்லை. இதேபோல்தான் ஓய்வு கொடுக்கப்பட்ட மற்ற நான்கு வீரர்களும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கில் மற்றும் சர்துல் தாக்கூர் இருவருக்கும் ஓய்வு கொடுக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முழு பலம் வாய்ந்த அணியாக களம் இறங்க திட்டமிட்டு இருந்தது. அதேபோல் இந்திய அணியும் தங்களது முழு பலமான அணியைக் கொண்டு களமிறங்குவார்கள் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்த்தது. ஆனால் தற்பொழுது ஆஸ்திரேலியாவின் திட்டத்திற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் செக் வைத்திருக்கிறது.

இந்தத் தொடரை பயிற்சி காலமாக இரு அணிகளும் இவ்வளவு நுட்பமாகப் பயன்படுத்தும் காரணம் என்னவென்றால், இரு அணிகளும் உலகக் கோப்பையில் தங்களின் முதல் போட்டியில் எதிர்த்து மோதிக் கொள்கிறார்கள். எனவே தங்களின் உலகக்கோப்பை பிளேயிங் லெவனை வெளிக்காட்டாமல் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!