“முதல் நாளில் 3வது இன்னிங்ஸ்.. இது இந்தியாவில் நடந்திருந்தா..!” – தினேஷ் கார்த்திக் கேள்வி!

0
433
DK

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து, பிறகு அதே 153 ரன்களுக்கு மேற்கொண்டு ஆறு விக்கெட்டுகளை கொடுத்து, ரன் ஏதும் எடுக்காமல் ஆல் அவுட் ஆனது.

தற்போது இந்த டெஸ்ட் போட்டி நடந்து வரும் ஆடுகளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையை கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளின் தரப்பிலுமே வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடுவது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கிறது.

இதுகுறித்து பேசி உள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான டர்னிங் ஆடுகளங்களில், இப்படி விரைவாக ஆட்டம் முடிவுக்கு வரும்பொழுது, மக்கள் அது குறித்து தங்கள் குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். ஆனால் வேகப்பந்து வீட்டுக்கு சாதகமான மைதானத்திலும் அதேதான் நடக்கிறது. நேற்று ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தன. அவற்றில் சில விளையாட முடியாத பந்துகளும் இருந்தன.

- Advertisement -

விளையாடுவதற்கு சவாலான ஆடுகளங்களுக்கும் விளையாடுவதற்கு கடினமான ஆடுகளங்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. விளையாட கடினமான ஆடுகளங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவை. இது திறமை சம்பந்தப்பட்டது கிடையாது அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டது. நேற்றைய ஆடுகளம் விளையாடுவதற்கு கடினமான ஒன்று. சிராஜ் சரியான இடத்தில் தொடர்ந்து பந்து வீசியதால் கூடுதல் பவுன்ஸ் எடுத்து விக்கெட் கைப்பற்றினார்.

ஒரே நாளில் 23 விக்கெட் இந்தியாவில் சுழற்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் விழுந்திருந்தால், அதைப் பற்றி வெளியில் இருந்து அனைவரும் மிக மோசமான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பார்கள். இது ஏன் இப்படி? என்பதாக ஆரம்பித்து, ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டியில் இவ்வளவு அவசரம் தேவையா? என்று பலதும் பேசி இருப்பார்கள். ஆனால் இப்போது இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? ” என்று கேள்வியை முன் வைத்து கூறி இருக்கிறார்.