தொடரும் 31 வருட சோகம்.. தென் ஆப்பிரிக்கா தோல்வி.. பைனலில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன!

0
329
Australia

13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்டன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. தென் ஆப்பிரிக்க அணியின் டெம்பா பவுமா 0, குயின்டன் டி காக் 3, வான்டர் டேசன் 6, எய்டன் மார்க்ரம் 10 என 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த ஹென்றி கிளாசன் தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மார்க்கோ யான்சன் கோல்டன் டக் அடித்தார். ஒரு முனையில் தனியாக நின்று போராடிய டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி 116 ரன்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. டேவிட் வார்னர் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 62 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஸ் 0, ஸ்மித் 30, லபுசேன் 18, மேக்ஸ்வெல் 1, ஜோஸ் இங்லீஷ் 28 என ரன்கள் எடுத்து வெளியேற, வெற்றிக்கு இருபது ரன்கள் தேவைப்பட்டபொழுது ஆஸ்திரேலியா ஏழு விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கு அடுத்து பந்துவீச்சில் கூட்டணி அமைத்த ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் பேட்டிங்கில் கூட்டணி அமைத்து பொறுப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை 47.2 ஓவர்களில் வெல்ல வைத்தார்கள். ஸ்டார்க் 16, கம்மின்ஸ் 14 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கோட்சி மற்றும் சாம்சி இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

1992 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று வரும் தென்ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத சோகம் 31 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13 வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.