300+ ஸ்கொர் அடித்து இந்தியாவை வீழ்த்தியிருப்போம், ஆனால் எங்களை தடுத்ததே இவர்தான்; இந்த ட்விஸ்ட் நாங்க எதிர்பாக்கல – இலங்கை கேப்டன் பேட்டி!

0
2369

எளிதாக 300க்கும் அதிகமான ரன்கள் அடித்திருக்க வேண்டிய போட்டி, ஆனால் இவரது பவுலிங் எங்களை தடுத்து விட்டது என்று பேசியுள்ளார் இலங்கை அணி கேப்டன் தசுன் சனக்கா.

இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதற்கு களமிறங்கியது இலங்கை அணி.

- Advertisement -

100 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, பாலுக்கு பால் ரன்களை அடித்துவந்தது. ஆனால் குல்தீப், சிராஜ் மற்றும் உம்ரான் மூவரும் மிடில் ஓவர்களில் திணறடித்து, அடுத்த 115 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது.

216 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய இந்திய அணியை தங்களது பந்துவீச்சு மூலம் இலங்கை அணி திணறடித்தனர். 86/4 என தடுமாறிய போது ஹர்திக் மற்றும் கேஎல் ராகுல் 5வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்து மீண்டும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினர்.

ஹர்திக் 36 ரன்கள் அடித்து அவுட் ஆகியபின், அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் இருவரும் உதவ, இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொறுப்புடன் விளையாடி வெற்றியை உறுதி செய்தார் கேஎல் ராகுல். கேஎல் நிதானமாக 64 ரன்கள் அடித்திருந்தார். 44வது ஓவரில் இலக்கை கடந்து இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

போட்டி முடிந்தபின் போட்டி கொடுத்த இலங்கை கேப்டன் ஷனக்கா பேசுகையில்,

இந்த தோல்விக்கு முதல் காரணம் நாங்கள் போதிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. உரிய டார்கெட் அமைக்கவில்லை என்பதுதான். இரண்டாவதாக நாங்கள் 300+ ரன்கள் இந்த மைதானத்தில் அடித்திருக்க வேண்டும். எங்களை கட்டுப்படுத்தியது குல்தீப் யாதவின் பவுலிங். சரியான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்துவிட்டார். இதன் காரணமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த ரன்களை அடிக்க முடியவில்லை.

ஆனாலும் எங்களது பவுலர்கள் நன்றாக செயல்பட்டனர். அந்த சமயத்தில் கே எல் ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்து, இந்தியாவின் பக்கம் திருப்பினர். இறுதிவரை எங்களால் அவர்களிடம் இருந்து ஆட்டத்தை திரும்பப்பெற முடியவில்லை. இந்த வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.