2023 உலக கோப்பையை பொருட்படுத்தாமல் திடீரென ஓய்வு முடிவை அறிவித்த 3 முன்னணி வீரர்கள்

0
782
Eoin Morgan and Ben Stokes

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வருவதற்கு சில மாதங்கள் முன்பாகவே தங்களது ஓய்வு முடியை அறிவித்த வீரர்களின் பட்டியலை நாம் இங்கு காண இருக்கிறோம்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் வீரர்கள் பலர் 30 வயதை கடந்துவிட்டால், அடுத்த உலக கோப்பைக்கு எவ்வளவு மாதங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிலிட்டு அதற்கேற்றார் போல் ஓரிரு உலகக் கோப்பை தொடர்களுக்கு பிறகு ஓய்வு முடிவை அறிவிக்க திட்டமிடுவர். ஆனால் சமீப காலமாக முன்னணி வீரர்கள் சிலர் உலக கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென தங்களது ஓய்வு முடிவை அறிவித்திருக்கின்றனர்.

- Advertisement -

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது வரை மூன்று முக்கியமான வீரர்கள் திடீரென ஓய்வு முடிவுகளை அறிவித்துள்ளனர். அவர்கள் பட்டியல் இதோ..

பென் ஸ்டோக்ஸ்

சமகால கிரிக்கெட் போட்டிகளில் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக இருந்து வரும் பென் ஸ்டோக்ஸ், லிமிடெட் ஓவர் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய பிறகு தனது ஓய்வு முடிவை இவர் அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை இவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் மட்டுமல்லாது, பத்து ஓவர்கள் மிகச் சிறப்பாக வீசக்கூடிய இவர் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் பெருத்த பின்னடைவாகவும் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இயன் மார்கன்

இங்கிலாந்து அணிக்கு 2019 ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையை பெற்று தந்த கேப்டன் இயன் மார்கன், 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை இவர் அறிவித்தது மற்றுமொரு அதிர்ச்சியாக இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இங்கிலாந்து அணிக்கு இவரது அனுபவம் லிமிடெட் ஓவர் போட்டிகளில் மிகப்பெரிய உதவிகரமாக இருந்தது.

- Advertisement -

மார்கன் இல்லாததால் ஜோஸ் பாட்லர் கேப்டன் பொறுப்பை வகித்து வருகிறார். இவர் தலைமையில் இங்கிலாந்து அணி இதுவரை விளையாடிய போட்டிகளில் வெறும் மூன்று போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. மார்கன் போன்ற அனுபவம் மிக்க வீரர் அணியில் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக இருப்பதேன்பது அப்பட்டமாக தெரிகிறது.

கிரன் பொல்லாட்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளின் கேப்டனாக இருந்து வந்த பொல்லாட், ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த சமயத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி லிமிடெட் ஓவர் போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறது. அணியில் அனுபவம் மிக்க வீரர்கள் வெகு சிலரே இருக்கின்றனர். ஆனாலும், போதிய அளவு வெற்றிக்கு அது உதவவில்லை.

பொல்லாட் போன்ற வீரர்கள் உலக கோப்பையில் இருந்தால் நிச்சயம் மனதளவிலும், அனுபவத்திலும் வீரர்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கும். ஆனாலும் சில அழுத்தங்கள் காரணமாக அவர் விலகி இருக்கிறார். தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் இவர் நிச்சயம் இந்தியாவில் மைதானங்களில் போக்கு எப்படி இருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார். இதுவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு உதவிகரமாக இருந்திருக்கும். இவரது ஓய்வும் அணியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.