டி20 உலகக்கோப்பை அணியில் முகமது சமி இடம்பெறாததற்கு 3 முக்கிய காரணங்கள்!

0
70

டி20 உலக கோப்பையில் முகமது சமி ஏன் ரிசர்வ் வீரராக மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறார்? ஏன் அணியில இடம் பெறவில்லை? என்பதற்கு மூன்று காரணங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, 15 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. அதே நேரம் டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களுக்கான வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பந்துவீச்சின் காரணமாக தோல்வியை தழுவியது என்று கணிக்கப்பட்டு வருகிறது. அந்த அணியில் முகமது சமி இடம்பெற்று இருந்தால் முற்றிலும் மாறுபட்ட அணியாக இந்தியா காணப்பட்டிருக்கும் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் டி20 உலக கோப்பைக்கு முகமது சமி மிகச் சரியாக இருப்பார். ஆஸ்திரேலிய மைதானம் வேகப்பந்துவீச்சிருக்கு சாதகமாகவும் இருக்கும் என்று கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், முகமது சமி இந்திய அணியில் எடுக்கப்படாமல் ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முகமது சமி ஏன் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை என்பது பற்றிய மூன்று முக்கிய காரணங்களை நாம் எங்கு பார்ப்போம்.

1. சர்வதேசப் போட்டிகளில் போதிய அளவிற்கு விளையாடவில்லை

ஐபிஎல் போட்டிகள் முடித்த பிறகு, முகமது சமி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் போதிய அளவிற்கு விளையாடவில்லை. குறிப்பாக டி20 போட்டிகளில் அவர் நீண்ட காலமாக விளையாடவில்லை. இதன் காரணமாக எடுக்கப்படாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் முகமது சமியை விட சமீப காலமாக அதிக அளவு சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கலாம்.

- Advertisement -

2. அதிக அளவு எக்கனாமி ரேட் – 9.55

முகமது சமியின் டெத் ஓவர் எக்கனாமி ரேட் கிட்டத்தட்ட 10 ஆகும். புதிய பந்துகளில் சமி நன்றாக வீசினாலும் டெத் ஓவர்கள் எந்த ஒரு அணிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதில் முகமது சமி அதிகளவு ரன்களை விட்டுக் கொடுக்கிறார். ஏற்கனவே அணியில் புவனேஸ்வர் குமார் இருக்கிறார். அவர் புது பந்தில் நன்றாக விக்கெட்டுகளையும் ரன்களையும் கட்டுப்படுத்த கூடியவர். ஆனால் டெத் ஓவர்களில் முகமது சமிக்கு இணையாக ரன்களை விட்டுக் கொடுக்கிறார். அதேநேரம் டெத் ஓவர்களில் நன்றாக வீசுவதற்கு பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் இருக்கின்றனர். புதிய பந்தில் வீசுவதற்கு ஏற்கனவே புவனேஷ்வர் குமார் இருக்கிறார் என்பதால் முகமது சமி வெளியில் அமர்த்தப்பட்டு இருக்கலாம்.

3. டெத் ஸ்பெஷலிஸ்ட் தேவை

முகமது சமி டெத் ஓவர்களில் திருப்தி அளிக்கும் அளவிற்கு செயல்படவில்லை. அவரது புள்ளி விவரங்களும் மோசமாக இருக்கிறது. இதை சரி செய்வதற்கு ஹர்ஷல் பட்டேல் இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக அனுபவிக்க பும்ரா இருக்கிறார். புதிய பந்தில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் இருவரும் அசத்துவர். கூடுதலாக டெத் ஓவர்களில் அர்ஷதீப் சிங் சமீப காலமாக நன்றாக செயல்பட்டு வருகிறார் என்பதால் இந்திய அணியில் மற்றும் ஒரு வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை முற்றிலுமாக குறைந்து இருக்கிறது. அதன் காரணமாக முகமது சமி எடுக்கப்படாமல் இருந்திருக்கலாம்.