பாகிஸ்தானில் பிறந்து இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் விளையாடிய 3 வீரர்கள்!!

0
12509

பாகிஸ்தானில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய மூன்று கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை காண்போம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நேரு நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி என்றால் இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பர். உள்நாட்டு அரசியல் விவகாரங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் இருதரப்பு கிரிக்கெட் தொடர் தடைப்பட்டது. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதி வருகின்றன. கடைசியாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையின்போது இரு அணிகளும் மோதின. அடுத்ததாக வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனர். இரு அணி வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே இரு அணி வீரர்களும் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய சில கிரிக்கெட் வீரர்களும் இருக்கின்றனர். அவர்களை தொகுத்து வழங்கவே இந்த பதிவு.

பாகிஸ்தானில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய மூன்று வீரர்களின் பட்டியல்

குல் முகமது

- Advertisement -

குல் முகமது என்பவர் பாகிஸ்தானில் பிறந்து இந்திய அணிக்கு விளையாடிய முதல்வீரர் ஆவார். இவர் 8 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அதன்பிறகு இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. 1956-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான இவர் 9 டெஸ்ட் போட்டிகளை அந்த அணிக்காக விளையாடினார்.

அமீர் இலாஹி

1908 ஆம் ஆண்டு லாகூரில் பிறந்த அமீர் இலாஹி, இந்தியாவிற்காக 1947 ஆம் ஆண்டு அறிமுகமாகினார். இந்தியாவிற்காக இவர் எத்தனை போட்டிகள் விளையாடினார் என்பது எந்த பதிவேட்டிலும் குறிப்பிடப்படவில்லை. பிறகு பாகிஸ்தானுக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது. பாகிஸ்தான் அணிக்காக அறிமுகம் ஆகிய இவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 82 ரன்கள் மற்றும் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். கடைசியாக இவர் 1952 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் இவர் 44 ரன்கள் அடித்திருக்கிறார்.

3.அப்துல் ஹபீஸ் காதர்

லாகூரில் பிறந்த இவர் இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து, பாகிஸ்தான் அணியில் விளையாடி வந்த இவர் 1952 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் உருவெடுத்தார். இவர்தான் பாகிஸ்தான் அணிக்கு முதல் கேப்டன். 26 டெஸ்ட் போட்டிகளை அந்த அணிக்காக விளையாடிய இவர் 927 ரன்கள் அடித்திருக்கிறார். 5 அரை சதங்களும் இதில் அடங்கும். மேலும் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 1958 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், அதன்பிறகு அவ்வபோது இந்தியாவிலும் அவ்வப்போது பாகிஸ்தானிலும் வாழ்ந்து வந்தார் என தெரிகிறது.