2023-ல் வர்ணனையாளராக இருக்கும் 2019 உலகக்கோப்பை விளையாடிய 3 வீரர்கள்

0
387

2023 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை காண கொண்டாட்டங்களும் கணிப்புகளும் இப்போது இருந்தே துவங்கி விட்டன. இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் தற்போது இருந்தே ரசிகர்கள் உலக கோப்பையை எதிர்நோக்க ஆரம்பித்து விட்டனர் .

2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. அனைத்து போட்டிகளுமே இந்தியாவில் வைத்து நடைபெறும் முதல் உலகக் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது . 2016 ஆம் ஆண்டு இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை நடத்தியது . அதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து உலகக்கோப்பை போட்டிகளும் இந்தியா பாகிஸ்தான் ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் இணைந்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக ஐசிசி மும்பையில் வைத்து வெளியிட்டது . அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 46 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இவை இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .

கடந்த உலகக்கோப்பை போட்டிகளில் வீரர்களாக விளையாடிய மூன்று கிரிக்கெட் நட்சத்திரங்கள் இந்த உலகக்கோப்பை போட்டியில் வர்ணனையாளராக களம் இறங்கி இருக்கிறார்கள் . அவர்கள் எந்த வீரர்கள் என்று பார்ப்போம் .

ஆரோன் பின்ச்:
கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு தலைமை ஏற்று வழி நடத்தியவர் ஆரோன் பின்ச், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வை அறிவித்தார் . தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். ஒரு சிறந்த கேப்டனாகவும் திட்டங்களை வகுப்பதில் வல்லவராகவும் விளங்கிய ஆரோன் பின்ச் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் வர்ணனையாளராக இருந்து போட்டியின் நுணுக்கங்களையும் களத்தில அமைக்கப்படும் யூகங்கள் பற்றியும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவங்களை கொடுப்பார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த உலகக்கோப்பை போட்டியில் அரை இறுதி வரை தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அரை இறுதிப் போட்டியில் அவர்கள் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறினர்.

- Advertisement -

இயான் மோர்கன்:
கேப்டன் மோர்கன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இயான் மோர்கன் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு தலைமை ஏற்று அந்த அணி உலக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கியவர் . கிரிக்கெட்டை கண்டுபிடித்து இங்கிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவை நினைவாக்கிய கேப்டன் இவர்தான். 2015 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு அந்த அணிக்கு புத்துணர்வு ஊட்டி புதிய தாக்குதல் பாண்டி ஆட்டத்தின் மூலம் அவர்களை உலகின் நம்பர் ஒன் அணியாக ஒரு நாள் போட்டிகளில் வலம் வரச் செய்தவர். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்ற இருக்கிறார் . இவரது அதிரடியான அணுகுமுறை மற்றும் ஆட்டத்தின் யூகங்கள் ஆகியவற்றின் அறிவை ரசிகர்களும் இவரது வர்ணனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

தினேஷ் கார்த்திக்:
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மான தினேஷ் கார்த்திக் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினார் .. அதன் பிறகு சில காலம் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி வர்ணனையாளராக பணியாற்றிய இவரின் வர்ணனை 2021 ஆம் ஆண்டு ஆஷஸ் போட்டிகளின் போது மிகவும் பாராட்டப்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய இவர் 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடினார் . அந்தத் தொடரில் இவரது ஆட்டம் சுமாராக இருந்தது . இதனைத் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாததால் தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார் . இவரது துல்லியமான கிரிக்கெட் அறிவு மற்றும் தெளிவான பேச்சு ஆகியவை 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வர்ணனையில் முக்கிய பங்கு வகிக்கும்