டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காமல் வெளியேற வாய்ப்புள்ள 3 வீரர்கள்

0
1210
Ruturaj Gaikwad and Shreyas Iyer

தினேஷ் கார்த்திக் தனது 18 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் தற்போது பேட்டிங்கில் உச்சபட்ச சிறப்பான நிலையில் இருக்கிறார். மேலும் அவர் பேட்டிங்கில் பினிசிங் ரோல் செய்வதும், கூடவே விக்கெட் கீப்பர் என்பதாலும் அதிக முக்கியத்துவம் கொண்ட வீரராக மாறியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணியின் நட்சத்திர முன்னணி வீரர்களாகக் கருதப்பட்ட விராட் கோலி, மேக்ஸ்வெல், பாப் டூ பிளிசிஸ் போன்ற வீரர்களை விட, பெங்களூர் அணியின் இந்த ஆண்டு வெற்றிகளுக்கு அதிகப் பங்களிப்பை அளித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 16 ஆட்டங்களில் 330 ரன்களை 183 ஸ்ட்ரைக் ரேட்டில் நொறுக்கி இருந்தார்.

- Advertisement -

இந்தச் சிறந்த செயல்பாட்டால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் டி 20 தொடரில் வாய்ப்பு பெற்றதோடு தனது ஐ.பி.எல் பேட்டிங் பார்மை அப்படியே தொடர்ந்து, நான்காவது டி20 போட்டியில் 27 பந்துகளில் 55 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதும் வென்றார்.

தற்போது தினேஷ் கார்த்திக்கின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகளால் அவர் டி20 உலகக்கோப்பைக்குத் தேர்வாவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால் இதற்கு முன்னர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கான திட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் பெயர் இருக்கவில்லை. அவர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றால், ஏற்கனவே தேர்வு செய்யப்பட வாய்ப்பிருந்த ஒரு வீரர் வெளியேற்றப்படுவார். அப்படி வெளியேற்ற வாய்ப்புள்ள மூன்று வீரர்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்!

ஸ்ரேயாஷ் ஐயர்

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் துவங்க, அடுத்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் இடம்பெறும் போது, அந்த அணியில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு இடம் என்பது கடினம்தான். மேலும் தினேஷ் கார்த்திக் லெக்-ஸ்பின், பாஸ்ட் ஷார்ட்-பால் ஆகியவற்றில் பலகீனமானவராக இருக்கிறார். இதனால் பெரிய மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய மைதானங்கள் இவருக்கு கடினமாகவே இருக்கலாம்.

- Advertisement -
ருதுராஜ் கெய்க்வாட்

இந்திய அணியின் 50 ஓவர் போட்டிகளுக்கான மாற்று துவக்க ஆட்டக்காரராய் ருதுராஜை இந்திய கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. கே.எல்.ராகுல், ரோகித் சர்மா என இரு துவக்க ஆட்டக்காரர்களும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் விளையாடததால் ருதுராஜ் வாய்ப்புப் பெற்றார். தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுல், ரோகித் அணிக்குள் வரும்பொழுது, ஸ்ரேயாஷை மிடில் ஆர்டருக்கான மாற்று பேட்ஸ்மேனாய் வைத்துக்கொண்டு, ருதுராஜை நீக்கவும் வாய்ப்புண்டு!

இஷான் கிஷான்

இந்திய டி20 அணியில் மாற்றுத் துவக்க ஆட்டக்காரராய் இருக்கும் இஷான் கிஷான் விக்கெட் கீப்பர் என்பதால், இந்த இடத்திற்கு தினேஷ் கார்த்திக் கொண்டுவரப்பட்டு, ருதுராஜ், ஸ்ரேயாஷ் போன்ற வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இஷான் கிஷான் நீக்கப்படலாம்!