ரோகித் சர்மா கேப்டன்சியில் காணாமல் போன 3 இந்திய வீரர்கள்!

0
920
Rohit sharma

இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையோடு விலகிக் கொண்ட பின், துணைக் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா இந்திய அணிக்கு வந்தார்.

கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி குரூப் ஆட்டத்திலேயே தோற்று முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்து இருந்தது. இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இதையடுத்து இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா கேப்டனாக உயர்வு பெற்று மேலே வந்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரோடு தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி ஓய்வு பெற்றார். இதையடுத்து ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தார். இருவரும் சேர்ந்து ஆக்ரோஷமான ஆட்ட முறையை அணிக்குள் அறிமுகப்படுத்தி சில பெரிய முடிவுகளை எடுத்தார்கள்.

இத்தகைய முடிவின் ஒரு பகுதியாக இந்திய டி20 அணியில் இருந்த சில வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த கட்டுரையில் அப்படி காணாமல் போன 3 இந்திய வீரர்கள் யார் என்று தான் நாம் பார்க்க போகிறோம்.

ராகுல் சஹர்:

ராகுல் சஹர் இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் சாகலுக்கு மாற்று வீரராக இருந்து வந்தார். கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பையில் மிக மெதுவாக பந்து வீசும் சாகல் சரிப்பட்டு வரமாட்டார் என்று ராகுல் சஹ்ருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவர் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார். ஆனால் அந்த உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு இவருக்கு இந்திய டி20 அணியில் இடம் மறுக்கப்பட்டு விட்டது.

மொகமத் சமி:

கடந்த ஆண்டு யுனைடேட் அரபு எமிரேட்டில் நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பந்துவீச்சு நிறைய அடி வாங்கியது. இதற்கடுத்து இவர் இந்தியா டி20 அணியில் தேர்வாகவில்லை. இதற்கு அடுத்தும் தேர்வு ஆகாமல் போகலாம். தற்போது ஆசிய கோப்பையிலும் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

வருண் சக்கரவர்த்தி :

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மிஸ்டரி ஸ்பின்னர் என்று பெரிய விலைக்கு வாங்கப்பட்டு ஆச்சரியத்தை உருவாக்கியவர் இவர். பின்பு அந்த அணியில் சரியாக செயல்படாத காரணத்தினால், அடுத்து கொல்கத்தா அணிக்கு வந்து, சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் உடன் கூட்டு சேர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதனால் கடந்த ஆண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த உலகக் கோப்பைக்கு இவர் தேர்வானார். ஆனால் உலக கோப்பையில் இவரின் செயல்பாடு மிகச் சுமாராகவே இருந்தது. இதை அடுத்து இவர் இந்திய டி20 அணியின் திட்டத்தில் இருந்து காணாமல் போனார்.