கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை ஒட்டுமொத்த அணி வீரர்களும் வென்ற நிகழ்வுகள்

0
234
Whole Team Winning MOM

கிரிக்கெட் போட்டியை பொருத்தவரையில் ஒரு போட்டி நடந்து முடிந்த பின்னர் அந்தப் போட்டியில் விளையாடிய சிறந்த வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருது (ப்ளேயர் ஆப் தி மேட்ச்) வழங்கப்படும். அணியின் வெற்றிக்கு எந்த அளவுக்கு ஒரு வீரர் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறாரோ அதைப் பொறுத்து அவருக்கு அந்த விருது போட்டியின் முடிவில் வழங்கப்படும்.ஒரு சில சமயங்களில் ஒரு அணி வெற்றி பெற ஒரு வீரர் மட்டுமின்றி, இரண்டு வீரர்கள் சரிசமமாக அந்த விருதை பெறும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட்டநாயகன் விருதை இரண்டு வீரர்கள் பகிர்ந்துகொண்ட காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் ஆட்டநாயகன் விருதை வென்றது குறித்த செய்தியை நாம் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியாக இதுவரை மூன்று முறை ஆட்டநாயகன் விருது ஒட்டுமொத்த அணிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மூன்று போட்டிகளை குறித்து நாம் தற்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

தென்னாபிரிக்கா அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக (1998/99)

1998/99ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. டெஸ்ட் தொடரில் 5வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 351 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் சொதப்பினாலும் இரண்டாவது இன்னிங்சில் மிக அற்புதமாக கம்பேக் கொடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணி வெற்றி பெற 11 வீரர்களும் மிக முக்கிய காரணமாக விளங்கினார்கள். பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் அணியில் விளையாடிய மொத்த வீரர்களும் மிக சிறப்பாக செயல்பட, போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருது அணியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

நியூசிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக (1996)

1996 ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி மிகக் குறைவான ஸ்கோரை குவித்திருந்த போதிலும் அந்த போட்டியின் இரண்டாம் பாதியில் நியூசிலாந்து அணி வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு கடைசி நேரத்தில் அணியை வெற்றிபெறச் செய்தனர்.

- Advertisement -

குறிப்பாக முதல் பாதியில் பேட்ஸ்மேன்கள் அவ்வளவாக அளிக்காத பட்சத்தில், இரண்டாம் பாதியில் 6 வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். அது மட்டுமின்றி ஃபீல்டிங்கிலும் மற்ற வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட, போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி வீரர்கள் அனைவருக்கும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக (1996)

1994 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் இந்த சம்பவம் அரங்கேறியது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய விளையாடிய பாகிஸ்தான் அணியின் வீரர்கள் அனைவரும் தங்களுடைய சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த ஸ்கோரை எட்டி வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் சரிசமமாக தங்களுடைய பங்களிப்பை வழங்கிய காரணத்தினால் ஆட்டநாயகன் விருது அந்தப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.