இலங்கைக்கு எதிரான டி20 தொடர்.. 3 இந்திய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பு

0
777

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி நாளை ஜனவரி 3ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.இந்த  தொடரில் மூன்று இந்திய வீரர்கள் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது .அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

31 வயதான ராகுல் திருப்பாதி 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1798 ரன்கள் விளாசி இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்காக கடந்த சீசனில் ராகுல் திருப்பாதி 413 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரெட் 150 தாண்டி இருக்கிறது. ராகுல் திருப்பாதியை தொடக்க வீரர் அல்லது நடுவரசை என ஹர்திக் பாண்டியா எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சிவம் மவி அண்டர் 19 கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி அதிவேகமாக பந்துவீசி அனைவரும் கவனத்தையும் ஈர்த்தவர். காயம் காரணமாக சில காலம் கிரிக்கெட்டில் களமிறங்காத சிவம் மவி கடந்த விஜய் ஹசாரே தொடரில் ஏழு போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் சிவம் மவிக்கு இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கிய முகேஷ் குமாரும் இலங்கைக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்று இருக்கிறார். கடந்த ரஞ்சி கோப்பையில் ஐந்து போட்டிகளில் விளையாடி 20 வீக்கெட்டுகளை முகேஷ் குமார் வீழ்த்தி இருக்கிறார். அதேபோன்று இந்திய ஏ அணி தொடரில் களம் இறங்கி முகேஷ் குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். முகேஷ் குமார் ஐபிஎல் மினி நிலத்தில் 5.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் இருந்தது அவருடைய திறமைக்கு எடுத்துக்காட்டாக பார்க்கலாம். இந்த மூன்று வீரர்களில் ஏதேனும் ஒருவராவது இலங்கைத் தொடர் அறிமுகமாக ஹர்திக் பாண்டியா வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.