இரண்டாவது பயிற்சி ஆடத்திலும் விராட்கோலி இல்லை; முற்றிலும் வித்தியாசமான பிளேயிங் லெவன்!

0
15956

இந்தியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆசியக் கோப்பை தொடர் முடிவுற்றவுடன் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு டி20 உலக கோப்பைக்கு முன் பயிற்சியாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுடன் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடத்தப்பட்டது. இவை இரண்டையும் இந்திய அணி கைப்பற்றியது.

துரதிஷ்டவசமாக தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு முன்பு, பும்ராவிற்கு காயம் ஏற்பட்டதால் டி20 உலகக் கோப்பை அணியிலிருந்து விலகி உள்ளார் அவருக்கு மாற்று வீரராக முகமது சாமி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளார் என தகவல்கள் வருகிறது. அதற்கு ஏற்றார் போல அவரும் கொரோனா தொற்று சரியானவுடன், உடல் தகுதியை நிரூபித்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடருக்கு அக்டோபர் ஆறாம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்தது இந்திய அணி. உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக இரண்டு பயிற்சி ஆட்டங்களை வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா விளையாடுகிறது. தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்திய அணியில 7, 8 வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். ஆஸ்திரேலியா மைதானம் அவர்களுக்கு நன்கு தெரியும். மீதம் இருக்கும் வீரர்களுக்கு பழக்கப்படும் விதமாக இந்த பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. இரண்டாவது பயிற்சி ஆட்டம் பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின், கே எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் ஓய்வில் இருந்தனர். இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் மற்றும் கே எல் ராகுல் இருவரும் மீண்டும் அணிக்குள் வந்திருக்கின்றனர். விராட் கோலி இதிலும் விளையாடவில்லை. விராட் கோலியின் இடத்தில் தீபக் ஹூடா விளையாட வைக்கப்பட உள்ளார். மேலும் முதல் பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் அடித்த சூரியகுமார் யாதவ் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்தியாவின் பிளேயிங் லெவன்:

ரோகித், கே எல் ராகுல், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், யுசுவேந்திர சாஹல், அஸ்வின், புவி, ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங்