இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க டல்லாஸ் மைதானத்தில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. சூப்பர் ஓவர் சென்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்க அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா முதலில் பந்து வீசுவதென அறிவித்தது. பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 9, உஸ்மான் கான் 3, பகார் ஜமான் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து வந்த சதாப் கான் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 40 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து பொறுமையாக விளையாடிய கேப்டன் முகமது ரிஸ்வான் 43 பந்தில் 44 ரன்கள், ஷாகின் அப்ரிடி ஆட்டம் இழக்காமல் 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. அமெரிக்க அணியின் பந்துவீச்சில் நாஸ்தோஸ் கென்ஜிகே மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனன்க் படேல் 38 பந்தில் 50 ரன், ஆண்ட்ரூ கவுஸ் 26 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அமெரிக்க அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அணியின் ஆரோன் ஜோன்ஸ் சிறப்பாக விளையாட அந்த ஓவரில் 14 ரன்கள் வந்தது, அமெரிக்க அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க போட்டி டிரா ஆனது.
இதற்கு அடுத்து சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் 18 ரன்கள் சேர்த்தது. அந்த ஓவரையும் வீசிய முகமது ஆமீர் மூன்று வைடுகள் வீசினார். அந்த மூன்று வைடுகள் வீசப்பட்ட பொழுது விக்கெட் கீப்பிங் பைஸ் மூலமாக நான்கு ரன்கள் எடுக்கப்பட்டது. மொத்தம் அந்த இறுதி ஓவரில் ஏழு எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்தது.
இதையும் படிங்க: விராட் ரோகித் சாதனையை உடைத்த பாபர் அசாம்.. ஆனால் டி20 உலக கோப்பையில் தொடரும் சோகம்
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரின் முதல் மூன்று பந்தில் ஐந்து ரன்கள் எடுத்து இப்திகார் அகமது விக்கெட்டை இழந்தது. இதற்கு அடுத்த இரண்டு பந்தில் சதாப் கான் விளையாட ஏழு ரன்கள் வந்தது. இந்த நிலையில் கடைசி பந்துக்கு சிக்ஸர் அடித்தால் டிரா என்கின்ற நிலையில், சதாப்கான் ஒரு ரன் மட்டுமே எடுக்க, அமெரிக்கா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.