“2024 டி20 உலக கோப்பை.. கில் தேவையில்லை.. இந்த 12 பேர் போதும்” – 2007 டி20 உலக கோப்பை வென்ற இந்திய முன்னாள் வீரர் தேர்வு!

0
23872
ICT

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்திருக்க, அடுத்த வருடத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது.

கடந்த முறை வெஸ்ட் இண்டிஸ் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. தற்பொழுது தொடரை நடத்தும் நாடு என்பதால் நேரடியாக தகுதி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தோழர் அருகில் இருக்கின்ற காரணத்தினால், இந்த உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் எல்லா நாடுகளும் தங்களுடைய டி20 அணிகளை பலப்படுத்தும் வேலைகளை செய்யும்.

இதற்கு அதிகப்படியாக டி20 கிரிக்கெட்டுக்கு அட்டவணையில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் தேவையான இடங்களுக்கு புதிய வீரர்களை கொண்டு வருவதற்கு பரிசோதனை முயற்சிகள் செய்யப்படும்.

தற்பொழுது இந்திய டி20 அணியை வலிமைப்படுத்தும் விதமாக உலகக் கோப்பை முடிந்ததும் இந்தியாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது.

- Advertisement -

இதில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இளம் வீரர்களின் திறமையை கண்டறியும் விதமாக நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முன்னணி வீரர்களின் இடங்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்யவும் பரிசோதனை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவருமான கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீஷாந்த், அடுத்து நடைபெற இருக்கின்ற டி20 உலக கோப்பைக்கு 12 வீரர்களை முன் வைத்திருக்கிறார்.

அதில் அவர் மிக முக்கியமாக தற்போது வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு இடம் அளிக்கவில்லை. அதே சமயத்தில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு இடம் அளித்திருக்கிறார். மேலும் திலக் வர்மா, ருதுராஜ் மற்றும் சிவம் துபே, ரிங்கு சிங் போன்ற வீரர்களையும் அவர் தன்னுடைய அணியில் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், இஷான் கிஷான், முகமது சமி, முகமது சிராஜ், பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.