2024 டி20 உலக கோப்பை.. கோலி ரோகித் இல்லாத வலிமையான இந்திய அணி.. 15 அதிரடியான வீரர்கள்!

0
16534
ICT

அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் தங்களது முன்கூட்டிய தயாரிப்புகளை ஆரம்பித்திருக்கின்றன.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பார்களா என்பது சந்தேகமாகவே இருந்து வருகிறது. மேலும் கே.எல். ராகுல் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதி.

- Advertisement -

இந்த நிலையில் இவர்கள் யாரும் இல்லாமல், டி20 உலக கோப்பைக்கு 15 பேர் கொண்ட எந்த இந்திய அணி சென்றால் வலிமையாக இருக்கும் என்று, இந்தச் சிறிய கட்டுரையில் பார்க்கலாம்.

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 11 பேரும் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற வேண்டும். இது இல்லாமல் இன்னும் நான்கு பேர் மட்டுமே இந்த அணியில் சேர்க்கப்பட வேண்டும்.

சேர்க்கப்பட வேண்டிய நான்கு பேராக பும்ரா, குல்தீப், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருப்பார்கள்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் – ருதுராஜ்
இஷான் கிஷான் – சூரியகுமார்
திலக் வர்மா – ரிங்கு சிங்
ஹர்திக் பாண்டியா – அக்சர் படேல்
பும்ரா – அர்ஸ்தீப் – குல்தீப்

இந்த அணியில் மொத்தம் எட்டு பேர் பேட்டிங் செய்யக் கூடியவர்களாகவும், திலக் வர்மா உடன் சேர்த்து ஆறு பேர் பந்து வீசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். தேவைப்பட்டால் இஷான் கிஷான் இடத்தில் ஜிதேஷ் சர்மா விளையாடலாம். ஆடுகளம் வேகப்பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்தால் அக்சர் படேல் வெளியேற, முகேஷ் குமார் விளையாடலாம்.

எப்படியும் சுப்மன் கில், காயம் சரியாகி வரும் ரிஷப் பண்ட் இந்த வீரர்கள் குறித்து நிச்சயம் இந்தியத் தேர்வுக்குழு யோசிக்கும். ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷான் கிஷான் ஆகியோர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்து இதில் மாற்றம் வரும். ஆனால் கோலி ரோஹித் இல்லாமல் வலிமையான இந்திய டி20 அணி இருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்கது!