2024 ஐபிஎல் : சிஎஸ்கே ஆர்சிபி அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள்.. முழு அலசல்

0
563
IPL

மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 17வது ஐபிஎல் சீசனின் துவக்க போட்டியில் விளையாடுகின்றன.

நடப்புச் சாம்பியனாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் 16 ஐபிஎல் சீசர்களின் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டில் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பது குறித்து போட்டிக்கு முன்பு பார்ப்போம்.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் பலம்:

அந்த அணியின் முதல் பலம் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரது அனுபவமும், அணியை வழிநடத்தும் விதமும் ஈடு செய்ய முடியாது.அடுத்து மினி ஏலத்தில் அவர்கள் துவக்க இடத்திற்கு ரச்சின் ரவீந்தரா மற்றும் மிடில் ஆர்டருக்கு டேரில் மிச்சல் மற்றும் இந்திய இளம் வீரர் சமீர் ரிஸ்வி ஆகியோரை வாங்கி இருக்கிறார்கள்.

மேலும் பேட்டிங்கும் செய்யக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் கிடைத்திருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் நீளம் இப்போதைக்கு குறைந்தபட்சம் ஒன்பதாவது இடம் வரை இருக்கிறது. அவர்கள் விரும்பினால் 11 பேரும் பேட்டிங் செய்யக்கூடிய வகையில் அணியை அமைக்க முடியும் என்பது பெரிய பலம். மேலும் சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏற்ற வகையில் சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதும், அதில் மதிஷா தீக்சனா தவிர எல்லோரும் பேட்டிங் செய்வார்கள் என்பதும் மற்றொரு முக்கிய பலம்.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் பலவீனம்:

தற்போது மதிஷா பதிரனா காயம் அடைந்திருக்கின்ற காரணத்தினால் இறுதிக்கட்ட ஓவர்களுக்கு சரியான பந்துவீச்சாளர் இல்லை. முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருந்தாலும், அவர் பதிரனாபோல வருவது கடினம். இதேபோல் ஆசியாவில் சுழற்பந்து வீச்சை திறமையாக விளையாடக்கூடிய ஒரு சில வெளிநாட்டு வீரர்களின் கான்வே முக்கியமானவர். ஆடுகளம் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து வேகப்பந்து வீச்சிலும் சுழற் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர். ரச்சின் ரவீந்தரா இருந்தாலும் கூட, கான்வே இல்லாதது ஒரு சிறிய பின்னடைவை உருவாக்குகிறது.

ஆர்சிபி அணியின் பலம் :

காயம் குணமடைந்து ரஜத் பட்டிதார் அணிக்குத் திரும்பி இருப்பதும், டிரேடிங் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்கி இருப்பதும், பேட்டிங் யூனிட்டில் பாப், விராட், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என பெரிய அனுபவ வீரர்கள் இருப்பதும் பெரிய பலமாக அமைகிறது.

ஆர்சிபி அணியின் பலவீனம் :

முதலில் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு ஏற்ற வகையிலான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. முகமது சிராஜ் மட்டுமே பந்தை ஸ்விங் செய்து, மேலும் சில கட்டர்கள் வீசி பந்து வீட்டில் வலிமை சேர்ப்பார். அல்சாரி ஜோசப் மற்றும் பெர்குஷன் இருவரும் அதி வேகமாக வீசக்கூடியவர்கள், ஆனால் அவர்கள் அடித்து வீசுவதற்கு ஏற்ற மைதானம் பெங்களூர் மைதானம் கிடையாது. மேலும் ஆகாஷ் தீப் மற்றும் வைசாக் விஜயகுமார் இருவரும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாதவர்கள்.

இதற்கு அடுத்து சாகல் போன்ற விக்கெட் டேக்கிங் ஸ்பின்னர்கள் யாரும் கிடையாது. லெக் ஸ்பின்னர் கரன் சர்மா மற்றும் லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் மயங்க் டாகர் மட்டுமே இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய பவுலிங் யூனிட் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கும் மற்றும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும் ஏற்ற வகையில் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது.