525 ரன் மேட்ச் டிரா.. ருதுராஜ் அணி புள்ளி பட்டியலில் முதலிடம்.. சாம்பியனாக எந்த அணிக்கு வாய்ப்பு அதிகம்? – துலீப் டிராபி 2024

0
278
Ruturaj

நடப்பு துலீப் டிராபி தொடரில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் அபிமன்யு ஈஸ்வரனின் இந்தியா பி மற்றும் ருத்ராஜின் இந்தியா சி அணிகள் மோதிக்கொண்ட போட்டி டிரா ஆகி இருக்கிறது. இரண்டு சுற்றுகள் முடிவில் தற்போது புள்ளி பட்டியலில் ருதுராஜ் அணி முதலிடத்தை பிடித்து இருக்கிறது.

டிரா ஆன போட்டி

இந்த போட்டியில் டாஸ் தோற்ற ருதுராஜ் இந்தியா சி அணி முதலில் பேட்டிங் செய்து 525 ரன்கள் குவித்தது. இஷான் கிஷான் 113 ரன்கள் எடுத்தார். முகேஷ் குமார் மற்றும் ராகுல் சகார் நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்கள் எடுக்க, அந்த அணி 332 ரன்கள் எடுத்தது. அன்சூல் காம்போஜ் எட்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து நான்காவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா சி அணிக்கு கேப்டன் ருதுராஜ் 62 ரன்கள் எடுக்க, அந்த அணியின் நான்கு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. துலீப் டிராபி நான்கு நாட்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

2024 துலீப் டிராபி புள்ளிகள் மற்றும் நடக்கும் முறை

இந்த முறை துலீப் டிராபியில் ஏபிசிடி என நான்கு அணிகள் விளையாடுகிறது. இதில் ஒரு அணி மற்ற மூன்று அணிகளுக்கு எதிராக தலா ஒரு போட்டியில் விளையாடும். நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகள் விளையாடிக் முடிக்கும் பொழுது, எந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதோ அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

மேலும் நடப்பு துலீப் டிராபியில் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்படுகிறது. டிரா ஆகும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் அணிக்கு மூன்று புள்ளியும், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறாத அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில் இரண்டாவது சுற்றில் ருதுராஜின் சி அணி ஒரு வெற்றி மற்றும் முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் ஒரு டிரா என மொத்தம் 9 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா பி அணி ஒரு வெற்றி, இன்னிங்ஸில் முன்னிலை பெறாத போட்டியில் டிரா என மொத்தம் ஏழு புள்ளியுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதையும் படிங்க : 301 ரன் 10 விக்கெட்.. சஞ்சு சாம்சன் அதிரடி வீண்.. ஸ்ரேயாஸ் ஐயரின் இந்திய டி அணி தோல்வி.. துலீப் டிராபி 2024

மேலும் இந்தியா ஏ அணி ஒரு போட்டியில் தோல்வி மற்றும் ஒரு போட்டியில் வெற்றி என மொத்தம் 6 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயரின் இந்தியா டி அணி 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிகள் ஏதும் இல்லாமல் நான்காவது இடத்தில் இருக்கிறது. அடுத்து மூன்றாவது சுற்றில் இந்தியா ஏ,பிசி 3 அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு மட்டுமே வாய்ப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -