உலக கோப்பை 2023.. இந்தியாவை தாண்டி பாகிஸ்தானுக்கு வரலாற்று சம்பவத்தை செய்த இலங்கை.. மெண்டிஸ் சதிரா மிரட்டல் அடி!

0
491
Mendis

இன்று உலககோப்பை தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இலங்கை அணி மோதும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்வது என தைரியமாக தீர்மானித்து களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

- Advertisement -

பேட்டிங் செய்ய முடிவு எடுத்ததை நியாயப்படுத்த இலங்கை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இலங்கை பேட்ஸ்மேன்களின் நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. அவர்கள் எதிரே பந்து வீசும் பந்துவீச்சாளர்களின் பெயர்களைப் பற்றி எந்த கவலையும்படவில்லை.

இலங்கை அணியின் பதும் நிசங்கா 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரோடு சேர்ந்து விளையாடிய மூன்றாவது இடத்தில் வந்த குசால் மெண்டிஸ் அதிரடியில் பாகிஸ்தானை ஆட்டம் காண வைத்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய குசால் மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 122 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரோடு சேர்ந்து பொறுப்பாக விளையாட சதிரா சமரவிக்ரமா தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் சதத்தை உலகக்கோப்பையில் அடித்து அசத்தினார். கடைசியில் ஆட்டம் இழந்த அவர் 89 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

நடுவில் தனஞ்செய டி சில்வா 25, கேப்டன் சனகா 10, வெல்லாலகே 10 என ஆட்டம் இழந்து வெளியேற 50 ஓவர்கள் முடிவில், ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை அணி 344 ரன்கள் சேர்த்தது.
ஹசன் அலி பத்து ஓவர்களில், 71 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் இதுவரை உலகக்கோப்பையில் மிக அதிகபட்சமாக கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக 336 ரன்கள் விட்டு தந்து இருந்தது. இந்த நிலையில் இலங்கை அணி உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ரன்னாக 344 ரன்கள் பதிவு செய்தது.

மேலும் பாகிஸ்தான் அணி 270 ரன்கள் மேல் உலகக் கோப்பையில் பதிவு செய்தது, அதேபோல் இலங்கை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வென்றது கிடையாது. இந்த இரண்டில் ஒன்று இன்றைக்கு மாறுவது உறுதி!