2022 டெஸ்ட் ஓடிஐ டி20; பெஸ்ட் பேட்ஸ்மேன் பவுலரை அறிவித்தது பிசிசிஐ!

0
5502
BCCI

இன்றைய கிரிக்கெட் உலகில் லாபகரமான பணக்கார கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியம்தான். இந்தியாவின் மிகப்பெரிய மனித வளமும், அதில் மிகப் பெரும்பான்மையானோர் கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தை உச்சத்தில் வைத்திருக்கிறது!

தற்பொழுது இந்த ஆண்டிற்கான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த இந்திய பந்துவீச்சாளரை வாரியம் சற்று முன் அறிவித்திருக்கிறது!

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் ;
ஏழு போட்டிகளில் 680 ரன்களை 61.81 சராசரியில் குவித்திருக்கும் ரிஷப் பண்ட் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும், ஐந்து போட்டிகளில் 22 விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கும் ஜஸ்ட்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்!

ஒருநாள் கிரிக்கெட்;
17 போட்டிகளில் 724 ரன்கள் விளாசி இருக்கும் ஸ்ரேயாஸ் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், 15 போட்டிகளில் 24 விக்கட்டுகளை வீழ்த்தியிருக்கும் முகமது சிராஜ் சிறந்த பந்துவீச்சாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்!

டி20 கிரிக்கெட் ;
இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் திடீர் சூப்பர் ஸ்டார் ஆக உருவெடுத்து இருக்கும் சூரியகுமார் யாதவ் 31 போட்டிகளில் 1164 ரன்கள் சேர்த்து சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், புவனேஸ்வர் குமார் 32 போட்டிகளில் 37 விக்கெட்டுகள் உயர்த்தி சிறந்த பந்துவீச்சாளராகவும் தேர்வாகி இருக்கிறார்கள்!

- Advertisement -

இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய மிகப்பெரிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இடம் பெறாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இந்திய கிரிக்கெட்டுக்கும் கவலைக்குரிய ஒரு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது!