2022 டி20 உலகக்கோப்பை; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து!

0
4962
NZ

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி முக்கியமான ஆட்டம் ஒன்றில் அடிலைடு மைதானத்தில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற அயர்லாந்த அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற அதிகபட்ச வாய்ப்புகள் இருந்தது. ரன் ரேட் பற்றிய எந்தப் பிரச்சனையும் கிடையாது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு பவர் பிளேவில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். இந்த ஆட்டத்தில் இதுவரை தடுமாறி வந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மிகச் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 61 ரன்களை மூணு சிக்ஸர் மற்றும் ஐந்து பவுண்டரிகளுடன் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 185 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணிக்கு எட்டு ஓவர்களில் முதல் விக்கட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. ஆனால் இந்த நல்ல துவக்கத்தை வைத்துக்கொண்டு அவர்களால் இலக்கை வெற்றிகரமாக நெருங்க முடியவில்லை. குறிப்பாக நியூசிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் மிச்சல் சான்ட்னர் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அயர்லாந்து அணியால் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏறக்குறைய அரை இறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி விட்டது.

- Advertisement -

தற்பொழுது இவர்களது குழுவில் அடுத்து வரக்கூடிய அணி இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவா என்ற போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலியா அணி இப்பொழுது ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வெல்லும் பொழுது, இங்கிலாந்து அணியை விட கூடுதலான ரன் ரேட் பெறும். நாளை இலங்கை அணியுடன் விளையாடும் இங்கிலாந்து அணி வெல்லும் பட்சத்தில், இங்கிலாந்து அணி ரன் ரேட் அடிப்படையில் அரையறுதிக்கு தகுதி பெறவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது!