ஆசியக் கோப்பை தொடருக்கான வலிமையான இந்திய அணியின் பிளேயிங் லெவன்!

0
2473
Indian team

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி 6 ஆசிய நாடுகளை கொண்டு ஆசியக் கோப்பை 20 20 வடிவத்தில் யுஎஇ-யில் நடக்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியோடு ஆகஸ்ட் 28ஆம் தேதி மோதுகிறது!

இந்த ஆசியக் கோப்பை தொடருக்கு எந்த 11 பேர் கொண்ட இந்திய அணி வலிமையான அணியாக இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்!

- Advertisement -

ரோகித் சர்மா – கேஎல் ராகுல்

இந்தக் கூட்டணிதான் இந்திய அணிக்கான துவக்க ஜோடியாய் களமிறங்கும். கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டு விட்ட கே எல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறுவது உறுதி.

விராட்கோலி – சூர்யகுமார் யாதவ்

- Advertisement -

பேட்டிங் ஃபார்ம் சரிந்து இருக்கும் விராட் கோலி ஓய்வில் இருந்து திரும்பி ஆசிய கோப்பைக்கு வருகிறார். அவர் அணிக்கு வரும்பொழுது அவருக்கான மூன்றாம் இடம் அளிக்கப்படும். சூரியகுமார் யாதவ் அவரின் வழக்கமான இடமான நம்பர் நாளில் களமிறங்குவார்.

ரிஷப் பண்ட் – ஹர்திக் பாண்ட்யா

ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆகவும் வருவார். ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நம்பர் 6ல் களமிறங்குவார்.

தீபக் ஹூடா – புவனேஸ்வர் குமார்

பார்ட் டைம் ஆப்ஸ் பின்னரான அதிரடி பேட்ஸ்மேனான தீபக் ஹூடா இந்த ஆடும் அணியில் 7வது இடத்தில் இடம் பிடிக்கிறார். காரணம் சாகல் லெக்ஸ் ஸ்பின்னர் என்பதால், அணியில் ஒரு ஆப் ஸ்பின்னர் தேவைப்படுகிறார். தற்போது பௌலிங் பார்மில் உச்சத்திலிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேட்டிங்கும் கொஞ்சம் செய்வார் என்பதால் எட்டாமிடத்தில் வருகிறார்.

ஜஸ்பிரித் பும்ரா – அர்ஸ்தீப் சிங்

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஆடும் அணியில் இடம்பெறுவது ஆச்சரியமான விஷயம் கிடையாது. ஹர்திக் பாண்டியாவோடு 3 வேகப்பந்து வீச்சாளர்கள் வலதுகை என்பதாலும், சிறந்த பௌலிங் பார்மில் இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஸ்டீப் சிங் ஆடும் அணியில் இடம் பிடிக்கிறார்!

யுஸ்வேந்தர சாகல்

அணியின் பிரதான ஸ்பின்னராக லெக் ஸ்பின்னர் சாகல் அணியில் இடம் பிடிக்கிறார். ஒருவேளை ஆடும் அணியில் லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் பின்னரான ஜடேஜா இடம்பெற்றால், சாகலுக்குப் பதிலாக ஆப் ஸ்பின்னர் அஸ்வின் இடம்பெறலாம்.