“2020 ஃபுட் டெலிவரி பாய்.. 2023 உலக கோப்பை ஆட்டநாயகன்.. அரை இறுதிதான் குறிக்கோள்!” – நெதர்லாந்து வீரர் அட்டகாச பேச்சு!

0
2215
Netherlands

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இரண்டு போட்டிகளுமே ரசிகர்களுக்கு விருந்தளிப்பதாக அமைந்திருக்கிறது.

இரண்டாவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இதுவே முதல் போட்டி.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த நெதர்லாந்து, கேப்டன் எட்வர்ட்ஸ் அரை சதத்துடன் 229 ரன்கள் 50 ஓவர்களில் கிடைத்தது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த பங்களாதேஷ் அணிக்கு நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்கள்.

நெதர்லாந்து பந்துவீச்சாளர்களின் துல்லிய தாக்குதலில் இருந்து பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களால் மீளவே முடியவில்லை. இறுதியில் பங்களாதேஷ் அணி 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

நெதர்லாந்து அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பால் வான் மீக்கரன் மிகச் சிறப்பாக பந்து வீசி முக்கிய நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இவர் 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலையில், வாழ்க்கை தேவைக்காக ஃபுட் டெலிவரி பாயாக நெதர்லாந்தில் வேலை செய்தார். தற்பொழுது நெதர்லாந்து அணிக்குள் வந்து உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஆட்டநாயகனாக முன்னேறும் அளவுக்கு உழைத்திருக்கிறார்.

ஆட்டநாயகன் விருது வென்ற அவர் பேசும் பொழுது “இது மிகவும் அருமையாக இருக்கிறது. நாங்கள் அரை இறுதிக்கு செல்ல விரும்புகிறோம் அதனால் நாங்கள் போட்டிகளை வெல்ல வேண்டும் என்று கூறி இருந்தோம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு நாங்கள் மீண்டது மிகவும் சிறப்பாக இருக்கிறது. நாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருந்தோம். நாங்கள் விளையாட்டின் பாதையில் 230 மற்றும் 240 ரன்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். நாங்கள் அதை நோக்கி சென்றோம்.

எங்களது பந்துவீச்சில் ஆரம்பக் கட்டத்தில் ஆரியன் தத் மற்றும் லோகன் வான் பீக் இருவரும் மிக இறுக்கமாக பந்துவீசி அவர்களை கட்டுக்குள் வைத்திருந்தார்கள்.

நாங்கள் ஒவ்வொரு நாள் பயிற்சியிலும் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சிக்கு ஒதுக்குகிறோம். இன்று பாஸ் டி லீட் அருமையான த்ரோ ஒன்றை அடித்தார். இங்கு தனிப்பட்ட ஒருவரின் செயல் திறனை தேர்ந்தெடுப்பது கடினம். இது முழுக்க முழுக்க ஒட்டுமொத்த அணியின் கூட்டு செயல்பாடு ஆகும்!” எனக் கூறியிருக்கிறார்!