கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

2011 2023.. எந்த உலக கோப்பை இந்திய அணி சிறந்தது?.. யுவராஜ் சிங் தந்த அதிரடியான பதில்!

இந்திய அணி இறுதியாக 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் வென்று இருந்தது.

- Advertisement -

இந்த அணியில் பேட்டிங் யூனிட்டில் சச்சின் சேவாக் கம்பீர் யுவராஜ் சிங் தோனி ரெய்னா என சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள்.

இந்த அணியின் பேட்டிங் யூனிட்டின் சிறப்பு என்னவென்றால், துவங்குவதற்கும் இன்னிங்ஸை நடத்துவதற்கும் முடிப்பதற்கும் என மூன்று இடங்களிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள்.

அதே சமயத்தில் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணியில் உலகத் தரமான ஐந்து பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணியில் சிறந்த பேட்டிங் யூனிட்டும், ரோகித் சர்மா தலைமையிலான அணியில் சிறந்த பவுலிங் யூனிட்டும் இருந்தது. இரண்டு அணிகளுக்குமான வித்தியாசமாக இது மட்டுமே கூற முடியும்.

இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் உலகக் கோப்பையை கைப்பற்றிய பொழுது அதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கிய தொடர் நாயகன் யுவராஜ் சிங், இரண்டு அணிகளில் எது சிறந்த அணி என்பது குறித்தான தனது கருத்தை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும்பொழுது “இரண்டு உலகக் கோப்பை இந்திய அணிகளுமே நல்ல சண்டையிடக்கூடிய அணிகள். இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு விராட் கோலி பேட்டிங் செய்யப் போகிறார் என்பதை பொறுத்துதான் எது சிறந்தது என்று கூற முடியும்.

அதே சமயத்தில் சீரியஸாக சொல்வதாக இருந்தால், அப்பொழுது 10 முதல் 40 ஓவர்களுக்கு வெளியில் 5 பீல்டர்கள் இருந்தார்கள். மேலும் ஆட்டத்திற்கு ஒரே ஒரு பந்துதான் பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது அப்படி கிடையாது. எனவே இது இருவேறு காலக்கட்டத்தில், இருவேறு விதிமுறைகள் இருக்கும் பொழுது இருந்த அணிகள். இதைப் பொறுத்துதான் எல்லாம் அமைகிறது.

விராட் கோலி 100 சதங்கள் அடிப்பாரா இல்லையா என்று என்னால் இப்பொழுது கூற முடியாது. அவர் கொண்டிருக்கும் உடற்தகுதிக்கு 100 சதங்களை எட்ட முடியும். அவர் 50 அடிக்கும் பொழுதெல்லாம் அதை 100 ஆக மாற்றும் சராசரி என்பது நம்ப முடியாத ஒன்று இது நகைச்சுவையானது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!

Published by