சர்வதேச கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் அறிமுகமான அதே வருடம் களமிறங்கி தற்போது ஓய்வு பெற்றுவிட்ட 2 இந்தியர்கள்

0
440
Stuart Binny and Sanju Samson

கேரளா வீரர் சஞ்சு சாம்சன் 2015ஆம் சர்வதேச டி20யில் விளையாடினார். ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். அதே தொடரில் அவருக்கு விளையாடவும் வாய்ப்புக் கிடைத்தது. 7 வருடங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் கால் பதித்த சாம்சன் இன்று வரை இந்திய அணியில் நிரந்தர இடத்திற்கு போராடி வருகிறார். பலம் வாய்ந்த பேட்ஸ்மேனான இவர் ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். தொடர்ந்து அதைச் செய்ய முடியாததால் இந்திய அணியில் தன் இடத்தை பறி கொடுக்கிறார்.

ஆனால் தற்போது பிசிசிஐ திட்டமிட்டுள்ள இந்திய அணியில் உள்ளார். மேலும் ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவர் முக்கிய பங்காற்றுவார் என அனைவரும் நம்புகின்றனர். சஞ்சு சாம்சனுடன் 2015ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டியில் களமிறங்கிய வீரர்கள் இருவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்களைப் பற்றி பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

ஸ்டூவர்ட் பின்னி

2015 ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் சஞ்சு சாம்சன் அறிகமான அதே டி20ஐ தொடரில் ஸ்டூவர்ட் பின்னியும் தன் முதல் சர்வதேச டி20ஐ போட்டியை விளையாடினார். இவர் மொத்தமாக 3 டி20ஐ போட்டிகள் விளையாடினார். அதைத் தவிர ஒரு சில டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்றார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக தனி நபரின் சிறந்த பவுலிங் சாதனை இவரிடம் உள்ளது.

வங்கதேச அணிக்கு எதிராக 105 ரன்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இறங்கிய இந்திய அணிக்காக வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார். இந்தப் போட்டியை எவராலும் எளிதில் மறக்க முடியாது. சில மாதங்களுக்கு முன் ஸ்டூவர்ட் பின்னி தன் ஓய்வை அறிவித்தார். தற்போது அவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

ஶ்ரீனாத் அரவிந்த்

இவரும் 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு தேர்வானார். தன் அறிமுகப் போட்டியில் வெறும் ஒரே ஒரு விக்கெட் எடுத்தார். அது மட்டுமில்லாமல் அந்தப் போட்டியில் அவர் அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இந்த ஒரு போட்டிக்குப் பின் அவருக்கு எந்த வாய்ப்புகளும் கிட்டவில்லை. ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கவில்லை. இவரும் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது உள்ளூர் போட்டிகளில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். கர்நாடக அணியில் ஒரு ஊழியலாரக இருந்தார். தன் அனுபவத்தை வைத்து பவுலர்களை தயாரித்து ஒரு சில கோப்பைகளையும் வென்றுள்ளார்.