இந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில், என்னுடைய இலக்காக அவர் இருந்தார் – இந்திய வீரரை குறிவைத்து வாங்கிய காரணத்தை விளக்கிய ரிக்கி பாண்டிங்

0
258

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய குல்திப் யாதவ் 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவர் ஐந்தாவது இடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ் கடந்த இரண்டு வருடங்களாகவே சற்று சுமாராகவே விளையாடி வந்தார் அதன் காரணமாகவே இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமலே போனது. அதுமட்டுமின்றி கொல்கத்தா அணியில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் டெல்லி அணி அவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

தன் மீது எழுந்து அனைத்து விமர்சனங்களுக்கும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலமாக குல்தீப் யாதவ் பதிலளித்தார். சிறப்பாக அவர் விளையாடுவதற்கு கிடைத்த பரிசாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 தொடரில் அவரது பெயர் இணைக்கப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார்.

அவரை வாங்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்து விட்டேன் – ரிக்கி பாண்டிங்

ஐபிஎல் ஏலத்தில் ஒரு சில வீரர்களை நாங்கள் வாங்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தோம். அதில் எனக்கு குல்தீப் யாதவை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. இறுதியில் நாங்கள் வாங்கியும் விட்டோம்.

கடந்த இரண்டு வருடங்களாக அவரது ஆட்டம் சுமாராக இருந்தாலும் அவருடைய ஆற்றல் எப்பொழுதும் அவருக்குள் தான் இருக்கும். அவரை சிறந்த வகையில் தயார் படுத்தினால் நிச்சயமாக மீண்டும் அவருடைய சிறப்பான ஆட்டம் வெளி வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

அவருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டது அவருடைய ஆட்டம் மற்றும் மனநிலை என இரண்டிலும் சிறப்பான கவனிப்பு கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஷேன் வாட்சன் அவரது மனநிலைக்கு ஏற்றவாறு அவருடன் நிறைய பணியாற்றினார். இவை அனைத்தும் எங்களுக்கு கை கொடுத்தது அவர் எங்களது அணிக்கு இந்த ஆண்டு சிறப்பாக விளையாடினார்”, என்று சந்தோசமாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

மேலும் பேசிய ரிக்கி பாண்டிங் “அவரது பெயர் மீண்டும் பெரிய அளவில் வரும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் அவர் கொஞ்சம் வித்தியாசமானவர் – சிறந்த இடது கை லெக் ஸ்பின்னர்”, என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.