வீடியோ; ஒரு சைடு ஆர்ம் த்ரோ ரன்அவுட்; ஒரு மாஸ் கேட்ச்; மேட்சை முடித்த விராட் கோலி!

0
5710
Viratkohli

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று மோதின.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும்கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினார்கள்.

- Advertisement -

ஆரம்பம் முதலே கேஎல் ராகுல் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 33 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில்50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 19 ரன்கள், தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 183 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 54 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து இறுதி நேரத்தில் ஆட்டமிழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் மிச்செல் மார்ஷ் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

18வது ஓவர் வரை ஆட்டம் ஆஸ்திரேலியா வசமே இருந்தது. 19-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் சிறப்பாக விளையாடி வந்த ஆரோன் பின்ச்சை கிளீன் போல்ட் செய்தார். அடுத்த பந்தில் டிம் டேவிட்டை தன் அபார பீல்டிங் திறமையால் ஒற்றை ஸ்டம்பை பார்த்து அடித்து ரன் அவுட் செய்தார் விராட் கோலி. அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வர, ஆட்டத்தின் இருபதாவது ஓவரில் 11 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.

- Advertisement -

யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை வீச திடீரென்று முகமது ஷமி அழைக்கப்பட்டார். முதல் இரண்டு பந்துகளில் கம்மின்ஸ் 4 ரன்கள் எடுக்க, 3வது பந்தை தூக்கி நேராக அடித்தார், அந்தப் பந்தை பின்னோக்கி போய் ஒற்றைக் கையால் கேட்ச் செய்து, பவுண்டரி கோட்டை மிதிக்காமல் லாவகமாக வந்து அசத்தினார் விராட் கோலி. அவரின் இந்த ரன் அவுட் மற்றும் கேட்ச் மூலம் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. இந்த திருப்புமுனையை ஆட்டத்தை வெல்லவும் உதவியது. ஒரு ஆட்டத்தில் பீல்டிங் எந்த அளவு முக்கியம் என்பதை விராட் கோலி இன்று காட்டினார்!