16-வது ஐபிஎல் சீசன் ; சிஎஸ்கே அணி விளையாடும் முழு அட்டவணை பட்டியல்!

0
1232
CSK

பதினாறாவது ஐபிஎல் சீசன் அறிவிப்பு சற்று முன் வெளியானது. 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு வரை 15 சீசன் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது!

இந்த நிலையில் இந்த வருடத்திற்கான 16வது ஐபிஎல் சீசன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த முறை வழக்கம் போல் ஒவ்வொரு அணிகள் தங்களது சொந்த மைதானத்திலும் வெளி மைதானத்திலும் சரிசமமான போட்டிகளை விளையாட உள்ளன.

- Advertisement -

இரு குழுக்களாக பத்து அணிகள் பிரிக்கப்பட்டுள்ளதில் மும்பை டெல்லி ராஜஸ்தான் லக்னோ கொல்கத்தா அணிகள் ஒரு பிரிவிலும், சென்னை பஞ்சாப் ஹைதராபாத் பெங்களூரு குஜராத் ஆகிய ஐந்து அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. ஒரு பிரிவில் உள்ள அணி மற்றொரு பிரிவில் உள்ள ஐந்து அணிகளையும் தலா இரண்டு முறை எதிர்கொள்ளும். தனது பிரிவில் உள்ள நான்கு அணிகளுடன் ஒரு முறை மோதும். இதன் மூலம் 14 ஆட்டங்கள் ஒவ்வொரு அணிக்கும் கிடைக்கும்.

சென்னை அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை ;

மார்ச் 31 குஜராத் – வெளியில்
ஏப்ரல் 3 லக்னோ – சென்னையில்
ஏப்ரல் 8 மும்பை – வெளியில்
ஏப்ரல் 12 ராஜஸ்தான் – சென்னையில்
ஏப்ரல் 17 பெங்களூரு – வெளியில்
ஏப்ரல் 21 ஹைதராபாத் – சென்னையில்
ஏப்ரல் 23 கொல்கத்தா – வெளியில்
ஏப்ரல் 30 பஞ்சாப் – வெளியில்
ஏப்ரல் 27 ராஜஸ்தான் – சென்னையில்
மே 4 மும்பை – வெளியில்
மே 6 லக்னோ – சென்னையில்
மே 10 டெல்லி – சென்னையில்
மே 14 கொல்கத்தா – சென்னையில்
மே 20 டெல்லி – வெளியில்

- Advertisement -

மார்ச் 31ஆம் தேதி சென்னை குஜராத் அணிகளுக்கு இடையே துவங்கும் ஐபிஎல் லீக் போட்டிகள் மே 23ஆம் தேதி பெங்களூரு குஜராத் அணிகளுக்கு இடையே முடிவடைகிறது. பிளே ஆப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது!