#14YearsOfViratKohli வீடியோ வெளியிட்டு 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடிய விராட் கோலி!!

0
96

இந்திய அணிக்குள் நுழைந்து இன்றோடு 14 வருடங்களை விராட் கோலி நிறைவு செய்திருக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக சமூக வலைதளபக்கத்தில் அவர் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி இந்திய அணியில் அறிமுகமாகி இன்றோடு 14 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். இந்த போட்டியில் 22 பந்துகளுக்கு 12 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி அப்போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

- Advertisement -

சர்வதேச அறிமுக போட்டியில் விராட்கோலிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை என்றாலும், இந்த 14 வருடங்களில் அவர் சாதித்தது ஏராளம். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 43 சதங்கள் 64 அரை சதங்கள் அடித்திருக்கிறார். சச்சின் 49 சதங்கள் அடித்திருக்கிறார். அதற்கு அடுத்த அதிகபட்சமாக விராட் கோலி இருக்கிறார்.

விராட் கோலியின் தனிப்பட்ட அதிகபட்சமாக 183 ரன்கள் இருக்கிறது. இதுவும் இலங்கை அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது தான். இதுவரை 252 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி கிட்டத்தட்ட 12 ஆயிரத்து 500 ரன்களை அடித்திருக்கிறார். அதிவேகமாக 10,000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. இவர் 205 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். இந்த 14 வருடங்களில் 102 டெஸ்ட் போட்டிகள், கிட்டத்தட்ட 100 டி20 போட்டிகள் என மற்ற இரண்டுவித போட்டிகளிகளிலும் ஏராளமான பங்களிப்பை இந்திய அணிக்கு கொடுத்திருக்கிறார். 

சர்வதேச அரங்கில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் சேர்த்து 70 சதங்களை அடித்திருக்கிறார். மேலும் 92 அரை சதங்களையும் இவர் அடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு முதல் மூன்றுவித போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தனிப்பட்ட பேட்டிங்கில் மட்டுமல்லாது, கேப்டன் ஆகவும் எண்ணற்ற சாதனைகளை விராட் கோலி படைத்திருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு உலககோப்பைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர், சில நாட்கள் களித்து திடீரென அனைத்துவித போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இது ரசிகர்களிடையே பெருத்த வருத்தத்தை தந்திருக்கிறது.  ஒருநாள் பொட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 என மூன்று வித போட்டிகளிலும் சேர்த்து விராட் கோலி கிட்டத்தட்ட 23 ஆயிரத்து 500 ரன்களுக்கு மேல் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

- Advertisement -

சர்வதேச இந்திய அணியில் தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் விராத் கோலி, அதை கொண்டாடும் விதமாக தனது சமூக வலைதளபக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாகவும் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பதிவில், “14 வருடங்களுக்கு முன்பாக, இது துவங்கியது. இவை அனைத்திற்கும் நான் பெருமிதமாக உணர்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

https://www.instagram.com/reel/ChYzB_qAHt3/?igshid=MDJmNzVkMjY=